பத்திரிக்கைகள் பழிவாங்குகின்றன: புலம்பும் ராமதாஸ்
சென்னை:
என்னைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் பிரசுரித்து பத்திரிக்கைகள் தன்னைப் பழிவாங்குவதாக பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பத்திரிக்கைகள் மீது பாய்ந்தார்.
பத்திகைகள் என்னைப் பழி வாங்குகின்றன. வேண்டும் என்றே, அடிப்படையே இல்லாத பல செய்திகளைப்போட்டு வருகிறார்கள். இது கொஞ்சம் கூட நியாயமற்ற செயல் என்றார் .
தொடர்ந்து அவர் பேசுகையில், காங்கிரஸ்கார்கள் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.கூட்டணியில் குழப்பம் ஏற்பட அவர்கள் அனுமதிக்கக் கூடாது. பாண்டிச்சேரியில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில்இருக்கலாம்,
ராஜ்யசபா உறுப்பினரையும் அவர்கள் கொண்டிருக்கலாம், எனவே அவர்கள் பாண்டிச்சேரியை கேட்பதில்தவறில்லைதான்.
ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பாண்டிச்சேரியில் போட்டியிட்டு 13,000 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றியைத் தவற விட்டோம் என்பதை மறந்து விடக் கூடாது. இந்த விஷயம் குறித்துமறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
ஆனாலும் தொடர்ந்து பாண்டிச்சேரி விவகாரம் குறித்து கேள்விகளை நிருபர்கள் அடுக்கியபோது, அது முடிந்துபோன விஷயம், இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள், பதில் சொல்ல முடியாது என்றரீதியிலேயே பதில்களைத்தந்துவிட்டுக் கிளம்பினார் ராமதாஸ்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications