சென்னையில் வைகோவின் பிரமாண்ட பொதுக் கூட்டம்: மதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
சென்னை:
பொடாவில் கைதாகி 19 மாதங்களை சிறையில் கழித்து ஜாமீனில் வெளியே வந்துள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கலந்து கொள்ளும் முதல் பொதுக் கூட்டம் இன்றிரவு சென்னை அண்ணா நகரில் புல்லா அவென்யூவில்நடக்கிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களின் பெயர்களையும் வைகோஅறிவிக்கிறார்.
முன்னதாக தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தான் முதல் பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அங்கேயேமுதல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் மதிமுகவினர்.
சிவகாசியில் வைகோவே போட்டியிட உள்ள நிலையில் வந்தவாசியில் செஞ்சி ராமச்சந்திரனும், திருச்சியில்எல்.கணேசனும் நிற்க உள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில் தான் வேட்பாளர் யார் என்பது தெரியவில்லை. இன்றுதான் அதனை வைகோ அறிவிக்கவுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டு வந்துள்ள வைகோவின் பொதுக் கூட்டத்தில்பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான வேன்கள், கார்கள், பஸ்கள், லாரிகளில் மதிமுகதொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர்.
வைகோவுடன் கைதாகி சிறையில் இருந்த 8 மதிமுக நிர்வாகிகளும் இக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
வாசனுடன்-மதிமுகவினர் சந்திப்பு
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் வாசனை மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட அக் கட்சியின்நிர்வாகிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்துப் பேசினர்.
திமுக கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றிருந்தாலும் இதுவரை இந்த இரு கட்சியினர் இடையிலும்சந்திப்பே நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications