வகுப்பறையில் ஆசிரியையை கத்தியால் குத்திய கணவன் தற்கொலைக்கு முயற்சி
சென்னை& பெரம்பலூர்:
ஆசிரியையை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திய அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலைக்குமுயன்றார்.
சென்னை கொருக்குப்பேட்டை மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்கள் கண் எதிரே இன்று இச் சம்பவம் நடந்தது.
மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவியின் மனைவி ஸ்டெல்லா மேரி. ஆசிரியையான மேரியைரவி காதலித்துத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஸ்டெல்லாமேரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருப்பதாக ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் வீட்டில் அடித்தடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று காலைகொருக்குப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தனது வகுப்பறையில் பாடம் நடித்திக் கொண்டிருந்தார்ஸ்டெல்லா மேரி.
காலை 11.30 மணிக்கு அந்த வகுப்பறைக்குள் கத்தியுடன் நுழைந்த கணவர் ரவி, ஸ்டெல்லா மேரியைசரமாரியாகக் குத்தினார். இதைப் பார்த்து அலறிய மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இருந்து சிதறி ஓடினர்.
கத்தியால் குத்தியதோடு, அங்கிருந்த மரக் கட்டையாலும் ஸ்டெல்லாவை ரவி தாக்கினார். இதில் அவர் மயங்கிசரிந்தார். இதையடுத்து தான் கொண்டு வந்த விஷத்தைக் குடித்த ரவியும் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இருவரையும்அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தந்தைதைக் கொன்ற மகன்:
இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் குடிகாரத் தந்தையை மகனே வெட்டிக் கொன்றார்.
விவசாயக் கூலியான அண்ணாநிதி (வயது 40) தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி சரோஜா, மகன் பாக்கியராஜ்(வயது 18), மகள் அழகுராணி ஆகியோரை அடித்து உதைப்பது வழக்கம். மேலும் மனைவி, மகளின் கைகளில்சூடத்தைப் பொறுத்தி வைத்து கொடுமைப்படுத்துவதும் உண்டாம்.
நேற்றும் அதே போல சூடத்தைக் கொளுத்தி வைத்து துன்புறுத்தியுள்ளார். தாய், சகோதரியைகொடுமைப்படுத்துவதைப் பொறுக்க முடியாத பாக்கியராஜ், அரிவாளை எடுத்து வந்த தந்தையை சரமாரியாகவெட்டினார். அதில் அந்த இடத்திலேயே அண்ணாநிதி இறந்தார்.
இதையடுத்து போலீசார் பாக்கியராஜைக் கைது செய்தனர். இவர் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications