நடிகர் தனுசுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.இதனால் படங்களில் நடிக்க அவருக்கு இருந்த சிக்கல் நீங்கிவிட்டது.
முதலில் ராகாவா படத்தில் பிரச்சனை ஏற்பட்டது. படத்தில் நடிக்க ரூ. 90 லட்சம் வரை அட்வான்ஸ் வாங்கிய தனுசும்அவரது அப்பா கஸ்தூரிராஜாவும் கால்ஷீட் தராமல் இழுத்தடித்தனர். இதனால் அந்தத் தயாரிப்பாளர்கள்நீதிமன்றத்தை அணுகினர். இதனால் புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
கூடுதலாக ரூ 2 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், அதைத் தர மறுத்ததால் தான் தங்களது படத்தில் நடிக்காமல்தனுஷ் இழுத்தடிப்பதாகவும் ராகாவா படத் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் ஒரு வழியாய்தீர்ந்த நிலையில் ட்ரீம்ஸ் படப் பிரச்சனை ஆரம்பித்தது.
தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் தயாரிக்க படத்தை கஸ்தூரி ராஜாவே இயக்கி வந்தார்.ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. இங்கும் சம்பளப் பிரச்சனையை கஸ்தூரி ராஜா கிளப்பினார்.
இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தனது படத்தில் தொடர்ந்து நடிக்க தனுஷ் மறுப்பதாகவும், எனவே ட்ரீம்ஸ் படத்தில் நடித்துக் கொடுத்தபிறகே புதிய படங்களில் தனுஷ் நடிக்கலாம் என்று உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் தள்ளுபடி செய்தார். தனுஷுக்கு சம்பளப்பாக்கி உள்ளது. இதன் காரணமாகத்தான் அவர் நடிக்க மறுத்துள்ளார்.
அவரைக் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கமுடியாது. மேலும், அவர் புதிய படங்களில் நடிப்பதையும் தடை செய்ய முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications