வீடுகளின் மீது விழுந்து வெடித்த மிக்: 4 பேர் பலி
ஜாம்நகர்:
குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம்வீடுகளின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் விமானி உயிர் தப்பிவிட்டார். ஆனால், வீடுகளில் இருந்த 4பேர் உயிரிழந்தனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
லக்கா பாவல் என்ற கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென தரையை நோக்கிப்பாயந்தது. இதையடுத்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கிவிட்டார்.
ஆனால், விமானம் வீடுகளின் மீது விழுந்து வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த 18 வயது வாலிபரும், 4 வயதானசரினா உஸ்மான் என்றசிறுமியும் முர்தஸா மமத் என்ற 5 வயது சிறுவனும், 50 வயதான அப்துல்கரீம் என்பவரும்உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இன்று காலை 9.42 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. மோதிய வேகத்தில் விமானம் ஐந்து பெரிய துண்டுகளாகசிதறியது. இதனால் விமானம் மோதிய வீடும் அருகாமையில் இருந்த 7 வீடுகளும் உடைந்து சிதறி, தீப் பிடித்துக்கொண்டன.
இந்திய விமானப் படையின் பயிற்சி விமானிய ஒருவர் மிக்-21 விமானத்தில் வழக்கமான பயிற்சியில்ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. காயமடைந்தவர்களில் 3 பேர் குழந்தைகள், 2 பேர் பெண்கள்.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications