வைகோ ஒதுங்குவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபடப் போவதால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியலுடன் சேர்த்து தமிழர் நலன், திராவிட மறுமலர்ச்சி குறித்து புதிய இயக்கத்தைத் துவங்க அவர்முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப்பின் அவரது இந்த இயக்கம் சிறகு விரிக்கும் என்று தெரிகிறது. தமிழ் உணர்வும், திராவிடக்கொள்கைகளும் கூர் மழுங்கிவிட்டதாகக் கருதும் வைகோ அது குறித்து மிகவும் கவலைக்குள்ளாகி இருப்பதாகவும்தெரிகிறது.

மேலும் டெல்லியை மையமாகக் கொண்ட சில சக்திகள் தமிழ் உணர்வாளர்களை முடக்கவும், திராவிடஇயக்கங்களை ஒழிக்கவும் சதி செய்து வருவதாக அவர் கருதுகிறார். அவர்கள் தமிழகத்தின் சில மதத் தலைவர்கள்உதவியால் மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் நினைக்கிறார்.

மொத்தத்தில் தமிழர் இயக்கங்கள், திராவிட சக்திகளை ஒழித்துக் கட்ட திட்டம் போடப்பட்டுள்ளதாக கருதுகிறார்.

இதையடுத்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தனக்கு இணையான சிந்தனைஅலைவரிசை உடைய அமைப்புகளுடன் சேர்ந்து தனது இயக்கத்தை அவர் தொடங்குவார் என்று தெரிகிறது.

மேலும் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் முக்கிய பிரசார பீரங்கியாக இருக்கப் போவது வைகோ தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் சிவகாசியில் போட்டியிட்டால் தன்னால் மாநிலம் முழுவதும் தமிழக அரசுக்கும், மத்தியஅரசுக்கும் எதிராக சரியான முறையில் பிரச்சாரம் செய்ய முடியாது என்றும் நினைக்கிறார்.

அதே போல ஒரு வேளை மீண்டும் சிறை செல்ல நேர்ந்தாலும், தான் எம்.பியாக இருந்தும் நாடாளுமன்றத்தில்குரல் தர முடியாமல் போகலாம் என்பதால், மதிமுக சார்பில் முடிந்தவரை அதிகபட்ச எம்.பிக்களின் நடமாட்டம்டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் வைகோ. அதனால் தான் சிப்பிப்பாறை ரவிசந்திரனைநிறுத்துவிட்டு அவர் ஒதுங்கிக் கொண்டுவிட்டார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, திராவிட இயக்கக் கொள்கைகள் காலூன்றிய இந்த இடத்தில் வேறு கொள்கைகளை தலை நுழைக்க விடமாட்டோம். கட்சியைப் பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடப் போகிறேன். எனவேதான் தேர்தலில் போட்டியிடவில்லை.

லஞ்ச, ஊழலை விட மிகமோசமான லஞ்சம், தேர்தல் நேரத்தில் மாநில அரசும்,மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டு நலத் திட்டங்களை அறிவிப்பதுதான். அந்த வேலையை இப்போது இரு அரசுகளும் செய்து வருகின்றன.

ஜெயலலிதாவின் முறைகேடுகளைச் சொல்லித் தான் ஓட்டு கேட்க இருக்கிறேன். சங் பரிவார் மத்திய ஆட்சியில் தலையிட ஆரம்பித்துவிட்டது. இதனால் தான் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம்.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கருணாநிதிக்கு இணையான ஒருவர் இன்று அரசியலில் யாரும் கிடையாது. திராவிட இயக்கத்துக்கு எதிராக எழும் கேடுகளை தடுக்கும் இயக்கமாக மதிமுக இனி செயல்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+