தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10 ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனது கொள்கையில் தொடர்ந்துஉறுதியாக இருப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதியாக கூறினார்.

பொடா சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக சிறையில் இருந்த வைகோ விடுதலையான பின் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பேசினார் வைகோ.

வழக்கமான இடி முழக்கமாக இருந்தது வைகோவின் பேச்சு. இளங்கோவடிகள் முதல் லார்ட் பைரன் வரையிலானஅறிவாளிகளின் படைப்புகளிலிருந்து மேற்கோள்களைக் காட்டி தனது பேச்சில் காரம் சேர்த்து விளாசித் தள்ளினார்வைகோ.

அவரது அனல் வார்த்தைகளின் சில துளிகள்:

என்னை ஜாமீனில் விடாமல், 10 ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்திருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.கொண்ட கடமை, கொள்கை, கோட்பாடுகளிலிருந்து நழுவ மாட்டான் இந்த வைகோ. சிறைவாசம் என்னைஒன்றும் செய்துவிடாது என்பதை என்னை சிறையில் அடைத்தவர்களுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும்.

சிறையில் இருந்தாலும் எனது கடமையிலிருந்து நான் விலகிடவே இல்லை. பிரதமருக்கும், வெளியுறவுஅமைச்சருக்கும் நான் பல கடிதங்கள் எழுதினேன். அத்தனையும் தமிழர்கள் படும் பாடு குறித்துத்தான். அவர்களும்என்னைப் போல பல நாடுகளில் சிறைவாசம் அனுபவித்தவர்கள்.

ஈழத் தமிழர்களின் அவலம் அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டியதுஒவ்வொரு தமிழனின் கடமை. ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் உள்ளனர். இதைசர்வதேச சமுதாயமே அங்கீகரித்துள்ளது.

தமிழன் எங்கே துன்பப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பான் இந்த வைகோ. அது ஈழத் தமிழனாய்இருந்தாலும் சரி, குஜராத் தமிழனாக இருந்தாலும் சரி, மராட்டியத் தமிழனாக இருந்தாலும் சரி.

இது நாட்டை ஆண்ட இனம். தமிழனுக்கு நிகரான வீரன் இந்த உலகத்தில் எவனும் இல்லை.

ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் பிரதமர் வாஜ்பாய். இதைநான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தோடு நில்லாமல், ஜெயலலிதாவின் ஆட்சியை வாயாரப் புகழுகிறார்வாஜ்பாய். இது பச்சை சந்தர்ப்பவாதம்.

1999ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியை இதே ஜெயலலிதா தான் கவிழ்த்தார். அப்போது வாஜ்பாய்க்கு ஆதரவாகஉறுதுணையாக நின்றவன் இந்த வைகோ. அந்த நன்றியை மறந்து விட்டார் வாஜ்பாய்.

குருஷேத்திரத்தில் பீஷ்மரை எதிர்த்து நின்றான் அர்ஜூனன். அதே நிலையில்தான் நானும் இப்போது இருக்கிறேன்.மதசார்பின்மையைக் கட்டிக் காக்காவிட்டால் நாடு சிதறுண்டுவிடும்.பா.ஜ.க.வை எதிர்த்து மிகக் கடுமையானகணை தொடுப்பேன்.

தம்பி வெளியே கடமை இருக்கிறது.. வெளியே வா என்று என் அண்ணன் (கருணாநிதி) உத்தரவிட்டார்.அதற்காகத் தான் வெளியில் வந்தேன். அண்ணன் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்.

அதிமுக இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படும். அது நிச்சயம் நடக்கும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+