பா.ஜ.க. தேர்தல் குழு கூட்டம்: புறக்கணித்தார் திருநாவுக்கரசர்
சென்னை:
சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த தேர்தல் குழுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்புறக்கணித்தார். இதன்மூலம் மாநில பா.ஜ.க. தலைவர்கள் மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படையாகவேகாட்டியுள்ளார் திருநாவுக்கரசர்.
தனக்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக சிலமூத்த தமிழக பா.ஜ.க. தலைவர்களும் சேர்ந்தே கூட்டுச் சதி செய்ததாக திருநாவுக்கரசர் கருதுகிறார்.
குறிப்பாக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் ஆகிய இருவர் மீதும்கடும் கோபத்தில் உள்ளார் திருநாவுக்கரசர். கட்சியின் தான் அடைந்த மிக வேகமாக வளர்ச்சியைப் பொறுக்காதஇருவரும் அதிமுகவுடன் சேர்ந்து உள்வேலை பார்த்து தன்னைக் கவிழ்த்துவிட்டதாக அவர் நினைப்பதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை இல்லாமலேயே அதிமுகவுடன் தொகுப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதும், இந்த இருவரும்தொகுதிப் பங்கீடு திருப்தி தருவதாக பேட்டியளித்தது நினைவுகூறத்தக்கது. ஆனால், திருநாவுக்கரசரின்ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னரே புதுக்கோட்டை கிடைக்காதது அதிருப்தி தருவதாகஇல.கணேசன் பல்டி அடித்தார்.
இந் நிலையில் நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திருநாவுக்கரசர், பிற்பகலில் தி.நகரில் உள்ளபா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல்புறக்கணித்தார்.
சென்னையில் இருந்தால் கூட்டத்திற்குப் போக வேண்டியிருக்கும் என்பதால் தனது குடும்பத்தினருடன்திருவட்டாறு கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் பா.ஜ.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் டென்சன் நிலவியது. திருநாவுக்கரசர் புறக்கணித்த கோபத்தைமறைக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன்.
இதற்கிடையே நேற்றும் இரண்டாவது நாளாக திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை பா.ஜ.க.அலுவலகத்தின் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications