விருதுநகரில் தொடங்கியது திமுக மாநாடு: விபத்தில் 2 தொண்டர்கள் பலி
விருதுநகர்:
விருதுநகரில் திமுகவின் தென் மண்டல மாநாடு இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டில்லட்சக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர்.
இதில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு ரயில் மூலம் விருதுநகர் புறப்பட்டார். காலையில் அவருக்குவிருதுநகர் ரயில் நிலையத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுகவின் வழக்கப்படி தொண்டர்கள் குடும்பங்களுடன் மாநாட்டில் குவிந்துள்ளனர். டெல்லி செங்கோட்டைபோன்ற நுழைவு வாயிலுடன் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலுக்கு முரசொலி மாறன் நகர் என்றுபெயரிடப்பட்டுள்ளது.
காலை 9.55 மணிக்கு திமுக கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜா ஏற்றி வைத்து மாநாட்டைத் துவக்கிவைத்தார். பின்னர் மாநாட்டுத் திடலை நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார். மாநாட்டுக்கு முன்னாள் மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு தலைமை தாங்குகிறார். 10.45 மணிக்கு கருணாநிதி விழா மேடைக்கு வந்தார்.
மாநாட்டுத் திடலில் நுழைய ஆண்களுக்கு கட்டணம் ரூ. 20ம், பெண்களுக்கு ரூ. 10ம் வசூலிக்கப்படுகிறது.குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். விருதுநகரின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்திமுகவினர் குவிந்து வருகின்றனர்.
மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் பிரமாண்ட மாநாட்டுத் திடலில்போடப்பட்டுள்ளன. சுற்றுப் பகுதி ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மின் பஸ்கள், பஸ்களும் மாநாட்டுப்பந்தலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றும் நாளையும் நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கருணாநிதிவெளியிடுகிறார். மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலையும் அவர்வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் இருமாதங்களாக மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
விருதுநகரில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு எல்லா சாலைகளிலும் திமுக கொடிகளும், தோரணங்களும்,வரவேற்பு வளைவுகளுமாகக் காட்சியளிக்கிறது.
நாளை இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன்,முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார்.
விபததில் 2 தொண்டர்கள் பலி:
இதற்கிடையே திருச்சி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்டதில் மாநாட்டுக்கு வந்து கொண்டிருந்த இரு திமுகதொண்டர்கள் பலியாயினர். அல்லூர் என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து நடந்தது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications