ரூ. 50,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு?
சென்னை:
நாட்டையே உலுக்கி வரும் சுமார் ரூ. 50,000 கோடி முத்திரைத் தாள் (ஸ்டாம்ப் பேப்பர்ஸ்) மோசடியில் தமிழகத்தில்பல போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரித்து வந்தடி.எஸ்.பி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர், மும்பையை மையமாக வைத்து அப்துல்கரீம் தெல்கி என்பவன் நடத்திய இந்த முத்திரைத் தாள்மோசடியில் தொடர்புடைய மகாராஷ்டிர துணை முதல்வர், மும்பை போலீஸ் கமிஷ்னர், கர்நாடக அமைச்சர்ஆகியோர் பதவி இழந்தனர். கர்நாடக அமைச்சரின் தம்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரூ. 50,000 கோடி அளவுக்கு நடந்துள்ளதாகக் கருதப்படும் நாட்டின் மாபெரும் மோசடியில் தமிழத்திலும்பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால், அது குறித்து நியாயமாக விசாரிக்க ஆரம்பித்த அதிகாரி திடீரெனஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில் இரு மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த முத்திரைத் தாள் மோசடியில்தொடர்பிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்திலும் போலி முத்திரைத் தாள் கும்பல் ஊடுருவி இருப்பதை வருமான வரித்துறைதான் முதலில்கண்டறிந்தது. அது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசாருக்கும் வருமான வரித்துறை தகவல் தந்தது. ஆனால்,உடனடியாக தீவிர விசாரணையை தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்தவில்லை.
ஓராண்டுக்குப் பின் மீண்டும் வருமான வரித்துறை நெருக்குதல் தரவே டி.ஜி.பி. ரமணி விசாரணை நடத்த க்யூபிராஞ்சுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய க்யூ பிராஞ்ச் இந்த போலி முத்திரரைத் தாள்மோசடியில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரைப் பிடித்தனர்.
ஆனால், அவரை முறைப்படி கைது செய்யவில்லை. இதற்கு சிபிசிஐடி அதிகாரியான முகமது அலியே காரணம்என்று கூறப்படுகிறது. நிஜாமுதீனைக் காப்பாற்ற அவர் முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நிஜாமுதீனைமுறைப்படி கைது செய்து சிறையில் அடைக்காமல் அதிகாரிகள் இன்பார்மலாகவே தங்களது கஸ்டடியில் வைத்துவிசாரித்து வந்துள்ளனர்.
இதற்காக டிஜிபி ரமணிக்கு மட்டும் ரூ. 7.5 லட்சம் லஞ்சமாகத் தரப்பட்டதாகவும், இதை முகமது அலியின் மகனேஅவரிடம் நேரில் போய் தந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிஜாமுதீனை அதிகாரிகள்தப்பவிட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், மத்திய உளவுப் பிரிவுகளின் நெருக்குதலால் நிஜாமுதீனை மீண்டும் தமிழக போலீசார் கைதுசெய்ததாகவும், ஆனால், விசாரணையை வேண்டுமென்றே தாமதமாக நடத்தி, முறையாக குற்றங்களையும் பதிவுசெய்யாமல் அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி வகை செய்துள்ளனர்.
மீண்டும் போலி முத்திரைத் தாள்கள் வியாபாரத்தில் நிஜாமுதீன் தீவிரமாக இருக்க 2002ம் ஆண்டு மே மாதம்சென்னை எல்.ஐ.சி. கட்டடம் அருகே வைத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவரது இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்கள்பிடிபட்டன. அதை போலீசார் கைப்பற்றியதாகவும், பின்னர் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுவந்ததையடுத்து அந்த போலி முத்திரைத் தாள்களை மீண்டும் நிஜாமுதீனிடமே தந்துவிட்டு போலீசார் விலகிக்கொண்டதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் தான் கர்நாடகத்தில் இந்த போலி முத்திரைத் தாள் விவகாரம் வெடித்தது. அம் மாநில போலீசார்விசாரணையில் இறங்கியபோது அப்போது தமிழகத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் குறித்து அவர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து தமிழகம் வந்த கர்நாடக போலீஸ் படை நிஜாமுதீனையும் மேலும் இரண்டு பேரையும் அமுக்கியது.நிஜாமுதீனின் வீட்டை கர்நாடக போலீசார் சோதனையிட்டபோது ரூ. 250 கோடி அளவுக்கு போலி முத்திரைத்தாள்கள் சிக்கின.
இவர்களை கர்நாடக போலீசார் அடித்து, உதைத்து விசாரித்தபோது பல உண்மைகளைப் புட்டுப் புட்டுவைத்துள்ளனர். தாங்கள் ஏற்கனவே தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், ஆனால் டி.ஜி.பி. ரமணி,முகமது அலி போன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பி வந்தததையும் தெரிவித்துள்ளனர்.
நிஜாமுதீனின் குடும்பத்தினரை மிரட்டி முகமது அலி அவ்வப்போது பல லட்சங்களை சுருட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இந்த மோசடியில் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து நேர்மையாகவிசாரித்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பியான செல்வராஜ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை நீலகிரிமாவட்டம் கூடலூர் வனப் பகுதிக்கு தூக்கி அடித்துள்ளனர். இதிலும் அதிகாரிகளின் கை இருப்பதாகத் தெரிகிறது.
இந்த விவரங்களோடு வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார். இதனால் அவருக்கு போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்தும் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த பொது நல வழக்கு மீது திங்கள்கிழமை (நாளை) விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் போலீஸ் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ள இந்த மோசடி அரசுக்கு பெரும் களங்கத்தைஏற்படுத்தலாம் என்று கூறப்படுவதால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.
போலி முத்திரைத் தாள் மோசடி விவகாரம் குறித்து அரசுக்க உரிய முறையில் தகவலைத் தராமல் இருந்தவிஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை எந்தப்பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications