தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி: நேரில் கண்ட மத்தியக் குழு அதிர்ச்சி
சென்னை:
தமிழகத்தில் வறட்சி நிலையைப் பார்வையிட்டு வரும் மத்தியக் குழுவினரை பல இடங்களில் மக்கள்முற்றுகையிட்டனர். கண்ணீர் மல்க தங்களது பயிர் இழப்புகளையும், குடிநீருக்காக பட்டுவரும் கஷ்டங்களையும்தெரிவித்தனர்.
சில இடங்களில் மக்களின் கோபம் மிகக் கடுமையாக இருந்ததால் மத்தியக் குழுவினரை போலீசார் தலையிட்டுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று முதல் மூன்று மத்தியக் குழுக்கள் தமிழகத்தில் வறட்சியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 11மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் செய்து வருகிறது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் பார்த்துமத்தியக் குழு அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர்.
இம் மாவட்டத்தில் காவிரியில் நீர் வராததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர்கள் கருகிப் போய்கிடப்பதை விவசாயிகள் காட்டியபோது அதிகாரிகளே ஆடிப் போயினர். மேலும் மாவட்டத்தின் பெரும்பாலானகிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை.
பொட்டல் காடுகளாய் நிற்கும் அந்த கிராமப் பகுதி மக்கள் அழுதபடியே தங்கள் நிலையை விளக்க மத்தியக்குழுவினர் கண் கலங்கும் நிலை ஏற்பட்டது. இம் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக நிருபர்களிடம்அந்தக் குழு மிகுந்த கவலையுடன் தெரிவித்தது.
இதனால் முடிந்த அளவு வேகமாக மத்திய அரசிடம் நிலையை விளக்கி அறிக்கை தரப் போவதாகவும் அவர்கள்கூறினர்.
அதே போல இன்னொரு குழு தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. அங்கு தென்னை, பனை மரங்கள்காய்ந்து போய் கீற்றுகளே இல்லாமல் வெறும் மொட்டையாக நிற்பதைக் கண்டது இந்தக் குழு. இந்த மாவட்டத்தில்ஆயிரக்கணக்கான மரங்கள் பட்டுப்போய் வருகின்றன.
மேலும் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு புல் இல்லாமல், தீவனமும் தர முடியாததால் பட்டினியால்இறந்துவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். பல்வேறு கிராமங்களில் மக்களே இல்லாமல் வெறிச்சோடிக்கிடப்பதையும் இந்தக் குழு நேரில் கண்டது.
தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கூலி வேலைக்காக அண்டைமாநிலங்களுக்குக் குடும்பங்களுடன் போய்விட்டதை கிராம அதிகாரிகள் இந்தக் குழுக்களிடம் விளக்கினர்.
இந்த மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் மத்தியக் குழுவினரை சூழ்ந்து கொண்டு அரசுக்கு எதிராககோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் தலையிட்டு இந்தக் குழுவினரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications