ஜெ. பிறந்த நாள்: ரத்த ஓவியம் வரைந்த ஹுசைனி- தேர் இழுத்த பொன்னையன்- தீச்சட்டி ஏந்திய வளர்மதி
சென்னை:
நாளை முதல்வர் ஜெயலலிதாவின் 56 பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, கராத்தே வீரர் ஷிகான்ஹுசைனி தனது ரத்தத்திலேயே 56 ஜெயலலிதா படங்களை வரைந்துள்ளார். அவற்றை அவர் காட்சிக்குவைக்கவுள்ளனர்.
அதே போல முதல்வரின் பிறந்தநாளையொட்டி நிதியமைச்சர் பொன்னையன் காளிகாம்பாள் கோவிலில்வெள்ளித் தேர் இழுத்தார். சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி இளங்காளியம்மன கோவிலில் தீச்சட்டி ஏந்திவழிபட்டார்.
ஜெயலலிதாவுக்கு நாளை 56வது வயது பிறக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்குஅதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வழக்கமாகவே ஏதாவது கராத்தே அரசியல் ஸ்டன்ட் செய்யும் ஹுசைனி இந்த முறை தனது உடலில் இருந்து 1,400மில்லி லிட்டர் ரத்தத்தை எடுத்து 56 ஜெயலலிதாவின் ஓவியங்களை வரைந்துள்ளார். இவற்றை நாளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகக் கூறும் அவர், அந்தக் கண்காட்சியை ஜெயலலிதாவும் பார்வையிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் தனது கராத்தே பள்ளிக்கு நிலம் ஒதுக்கக் கோரி தனது ரத்தத்தால் ஜெயலலிதாவின்படத்தை வரைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு 18 கிரவுண்ட் அரசு நிலத்தைஜெயலலிதா ஒதுக்கினார்.
ஹுசைனி போன்றவர்களுக்கு சளைக்காமல் நிதியமைச்சர் பொன்னையனும் இன்று காலை சென்னை பாரிமுனைகாளிகாம்பாள் கோவிலில் ஜெயலலிதாவுக்காக வெள்ளித் தேர் இழுத்தார். இதில் துணை மேயர் கராத்தேதியாகராஜன், சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்ளிட்ட வட சென்னை மாவட்ட அதிமுக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு அர்ச்சைனையும் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடத்தப்பட்டது.
அதே போல சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் வளர்மதி இன்று காலை சிறப்பு அர்ச்சனைசெய்தார். பின்னர் தீச் சட்டி ஏந்தி கோவிலை 3 முறை சுற்றி வந்தார். இந் நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக மகளிர்அணியினர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் மண்சோறு சாப்பிடுதல், மொட்டை அடித்தல், தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகளையும்அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். கர்நாடக அதிமுக சார்பில் நாளை பெங்களூர் அரசு மருத்துவமனையில்பிறக்கும் சில குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications