அதிமுக கைவிரிப்பு: கடன் தொல்லையில் இருந்து தப்ப கார்த்திக் போட்ட திட்டம் பணால்?
சென்னை:
தனது கடன் தொல்லைகளில் இருந்து தப்பவே, அதிமுகவில் சேர நடிகர் கார்த்திக் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதையடுத்து அவரை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா வந்துவிட்டதாக அதிமுகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் நடிகர், நடிகையரை சேர்க்கும் வேலை எஸ்.எஸ். சந்திரன் மற்றும் ராதாரவியிடம் தரப்பட்டுள்ளது.அவர்களும் வலை வீசி வருகின்றனர். இதில் கார்த்திக் தானாகவே முன் வந்து அதிமுக சேருவதாக ராதாரவியிடம்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தார் ராதாரவி. ஆனால், ஜெயலலிதாவை சந்திக்கஅவருக்கு இதுவரை வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கான காரணமும் சொல்லப்படுகிறது.
போதை வஸ்துக்கள், இத்யாதிக்கு அடிமையாகிவிட்ட கார்த்திக் பினாமிகளை வைத்து சொந்தமாகப் படமெடுத்தவகையில் ரூ.5 கோடி கடன், இது தவிர தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்காமல் டேக்காகொடுத்த வகையில் ரூ. 2 கோடி கடன் உள்ளது.
இதைக் கேட்டு மிரட்டி வருபவவர்ளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் கார்த்திக். இந் நிலையில் தேவர்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சசிகலா தரப்பினருடன் சில தொடர்புகளையும் வைத்துள்ளார்.
இந் நிலையில் தான் நடிகர், நடிகையரை தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்சியில் இழுக்கும் ஜெயலலிதாவின் திட்டத்தைஅறிந்து தானாகவே அதிமுகவில் சேர முன் வந்தார் என்கின்றனர்.
ஆனால், அவரை நம்பி எந்தப் பிரச்சாரக் கூட்டத்தையும் நடத்த முடியாது, வருவேன என்பார் கடைசி நேரத்தில்வர மாட்டார், அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கூட கஷ்டம் என ஜெயலலிதாவுக்கு போலீஸ்ரிப்போர்ட் கிடைத்ததையடுத்து கார்திக்குக்கு நோ செல்லப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
ஆனால், சசிகலா தரப்பில் இருந்து நெருக்குதல் தந்து எப்படியாவது அதிமுக கவசத்தை மாட்டிக் கொண்டு கடன்தொல்லையில் இருந்து தப்பும் முயற்சியில் தீவிரமாகவே இருக்கிறார் கார்த்திக்.
விவேக், குஷ்புவுக்கு அழைப்பு:
இதற்கிடையே அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு நடிகர் விவேக், குஷ்பு ஆகியோருக்கு தொடர்ந்துதூது போன வண்ணம் உள்ளது. இதில் சசிகலா தரப்புக்கு நெருக்கமாக உள்ள விவேக் தலையாட்டிவிடுவார் என்றேதெரிகிறது. அவரும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல குஷ்புவையும் எப்படியாவது இழுத்து வந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications