பலியிடத் தடை நீக்கம்: ஆடு, கோழிகளுடன் களை கட்டும் தென் மாவட்ட கோவில்கள்!
மதுரை:
ஆடு, கோழிகளைப் பலியிட தடை நீக்கப்பட்டு விட்டதால் தென் மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்கள், கிராமதேவதைக் கோவில்கள் மீண்டும களை கட்டத் தொடங்கி விட்டன.
கோவில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு திடீரென்றுகடுமையாக அமல்படுத்தத் தொடங்கியது.
இதனால் பக்தர்கள் குறிப்பாக கிராமப்புற கடவுள்களை வணங்கும் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தைச் சேர்ந்தபக்தர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்த முடியாததால் இந்தத்தடையை அரசு நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.
இந் நிலையில் தேர்தல் நெருங்குவதையொட்டி கிராமப்புற மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் கவரும்பொருட்டு, ஆடு, கோழி பலிக்கு தடையை நீக்கி அவரசச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
இதனால் பக்தர்கள், குறிப்பாக தென் மாவட்டத்தினர், பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ஆடு, கோழிகளுடன்அவர்கள் தங்களது குல தெய்வக் கோவில்களுக்கும், வழக்கமாக சென்று பலி கொடுக்கும் கோவில்களுக்கும்படையெடுத்து வருகிறார்கள்.
மதுரையில் உள்ள பாண்டி கோவிலில் ஆடு, கோழி வெட்டுவது மீண்டும் களை கட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஏராளமான ஆடுகள் வெட்டப்படுவது வழக்கம். தடைக்கு முன் இருந்ததை விடநேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மிக அதிகமாக ஆடுகள் வெட்டப்பட்டதாக கோவில் பூசாரிகள்தெரிவித்தனர்.
ஆடு பலிக்குத் தடையால் பக்தர்கள் கூட்டமின்றி, வாடி, வதங்கிப் போய் கிடந்த இந்தக் கோவிலைச் சுற்றிலும்உள்ள கடைகளும் மீண்டும் புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளன.
இதேபோல தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராம தேவதை கோவில்களிலும், தாயமங்கலம் மாரியம்மன்கோவில், காளியம்மன், மதுரை வீரன் சாமி கோவில்களிலும் ஆடு, கோழி பலியிடுதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications