கட்டிங்: வேட்டிகளை உருவி அதிமுகவினர் சண்டை
சென்னை:
சென்னை பொன்னேரி பகுதியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர்களிடையே அடிதடி மூண்டது.இதில் பலரது வேட்டிகள் உருவப்பட்டன. சேர்கள் பறந்தன. பலருக்கும் மண்டை உடைந்தது.
அரசின் டெண்டர்களை ஒரு கோஷ்டியே எடுத்து காண்ட்ராக்ட்கள் மூலம் பணம் பார்ப்பதாகவும், தங்களுக்குஉரிய கமிஷனோ, காண்ட்ராக்ட்களோ கிடைப்பதில்லை என்றும், காண்ட்கார்ட் பணத்தில் தங்களுக்கு கட்டிங்ஏதும் கிடைப்பதில்லை என்றும் கூறி ஒரு கோஷ்டி பிரச்சனை கிளப்பியது.
மேலும் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தங்களது பெயர்கள் போடப்படவில்லை என்று கூறிய அந்தகோஷ்டியினர் கூட்டம் ஆரம்பித்தவுடனேயே சேர்களைத் தூக்கி மேடை மீது வீசினர். இதனால் பேச வந்திருந்தநடிகை சி.ஆர். சரஸ்வதி அங்கிருந்து இறங்கி ஓடினார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உபயதுல்லா என்பவரது கோஷ்டியினர், எதிர்கோஷ்டி மீதுபாய்ந்து வேட்டிகளை உருவி எறிந்தனர். பதிலுக்கு எதிர்கோஷ்டியும் வேட்டி உருவல் கலை நிகழ்ச்சியைநடத்தியது.
இதனால் இரு தரப்பினரும் அரை நிர்வாணத்துக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து பரஸ்பரம் சட்டைகளைக் கிழிக்கஆரம்பித்தனர். தொடர்ந்து சேர்களைக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
இதனால் கூட்டம் நடந்த பொன்னேரி பகுதியே ரணகளமானது. போலீசார் தலையிட்டும் அமைதியை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications