டி.என்.ஏ. சோதனை: ரேணுகா மீது பா.ஜ.க. பாய்ச்சல்
சென்னை:
அத்வானியை பாகிஸ்தானியர் என்றும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவை நேபாளி என்றும்காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளத்ரி விமர்சித்துள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரேணுகா செளத்ரி அளித்த பேட்டியில், சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறும் பா.ஜ.கவினர்தங்களை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவர்களது முக்கியத் தலைவர் அத்வானி பாகிஸ்தானில் பிறந்தவர். இன்னொரு தலைவரான ராஜஸ்தான்தமுல்வரான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு நேபாள நாட்டுத் தொடர்புகள் உள்ளன.
எனவே அவர்கள் தங்களை முதலில் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தட்டும். அவர்களது இந்தியத் தன்மைஎவ்வளவு என்பது அப்போதுதான் தெரிய வரும். பின்னர் சோனியாவை அவர்கள் விமர்சிக்கலாம் என்றுகூறியிருந்தார் ரேணுகா.
இதற்கு பா.ஜ.கவினர் இடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அத்வானி 1947ம் ஆண்டுக்கு முன்பே பிறந்தவர். அதாவது ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்தவர். ஆனால்ரேணுகா செளத்ரி போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒருங்கிணைந்த இந்தியாவையே பிரித்துப் பார்க்கத்தான்தோன்றும். அவர்களது தலைமை அப்படி உள்ளது.
பிரதமர் ஆகும் விருப்பம் தனக்கு இல்லை என்று சோனியா காந்தி கூறுகிறார். ஆனால், பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என்று கூற அவர் தயாரா?
திமுகவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக வாஜ்பாய் மீது கருணாநிதி புகார் கூறியுள்ளார். இதுபோன்றபொய்யான புகார்களை கருணாநிதி மட்டுமே கூற முடியும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த வேறு எந்த தோழமைக் கட்சியும் இதுபோன்ற புகார்களைக்கூறவில்லை.
தமிழகத்தில் அமைந்துள்ளது அத்வானி-ஜெயலலிதா கூட்டணி என்றும் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை கருணாநிதிவிமர்சித்துள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாஜ்பாயைத்தான் பிரதமராக அறிவித்து பாஜக தேர்தலைசந்திக்கிறது.
ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறக் கூட முடியாத ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் கருணாநிதிஎன்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
நேற்று திருச்சி, புதுக்கோட்டை பா.ம.கவினர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் கட்சியின் மாநிலத் தலைவர்ராதாகிருஷ்ணனுக்கும எதிராக கட்சியின் தலைமையகத்தில் வந்து போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மட்டும்சீட்களை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பதாக இந்த இருவர் மீதும் அந்தத்தொண்டர்கள் சீற்றம் காட்டினர்.
இதையடுத்து கட்சி அலுவலகத்தை விட்டே பொன். ராதாகிருஷ்ணன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications