சங்கராச்சாரியார், ஜெ. மீது கருணாநிதி தாக்கு
சென்னை:
விருதுநகர் மாநாட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, திமுகவின் அரசியலில்இருந்து எளிமை காணாமல் போய்விட்டதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்து முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரையில் முதல்வர் ஜெயலலிதா,காஞ்சி சங்கராச்சாரியார் ஆகியோரை மறைமுகமாக ஒப்பிட்டு பதில் தந்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
என்ன செய்வது, அவாள் கனகாபிஷேகம் செய்தால் அது எளிமை
அவாளுக்கு ஆள் உயர மாலை போட்டால், அது எளிமை
அவாளுக்கு மலர்க் கிரீடம் சூட்டினால் அது எளிமை
அவாள் மகாமகத்துக்கு கோடிக்கணக்கில் செலவழித்தால் அது எளிமை
நம்மவாள், நுழைவுக் கட்டணம் போட்டும், பல லட்சம் பேர் காசு கொடுத்து பேச்சு கேட்க வந்தால்
அது எளிமையல்ல, ஏக ஆடம்பரம்... இரட்டை நாக்கு எப்படியும் பேசும்
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னதாக மாநாடு முடிந்த பின்னர் லட்சக்கணக்கான திமுகவினர் கலைந்து செல்லவே 4 மணி நேரம் பிடித்தகாரணத்தால் விருதுநகர் அந்த இரவில் தத்தளித்துள்ளது. மாநாட்டு மைதானத்தை விட்டு வெளியேற முடியாதகருணாநிதி அங்கேயே 4 மணி உட்காரும் நிலை ஏற்பட்டது.
பின்னர் அதிகாலையில் புறப்பட்டு மதுரை வந்த அவர் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு நேற்றிரவு தான்சென்னை கிளம்பினார்.
அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநாடு முடிந்தவுடன் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டும்கூட அவரத் கார் விருதுநகரில் கூட்டத்தைத் தாண்டி வெளியே வரவே 5 மணி நேரம் ஆகியுள்ளது. இதனைபொடா நீதிமன்றத்தில் நிருபர்களிடம் தெரிவித்த வைகோ, இதைப் போன்ற ஒரு கூட்டத்தை நான் பார்த்ததேஇல்லை. விருதுநகரில் ஜனக் கூட்டம் அல்ல, ஜனக் கடல் திரண்டது என்றார்.
பா.ஜ.க. எதிர்ப்பு:
இதற்கிடையே விருதுநகரில் திமுகவும் தோழமைக் கட்சியினரும் பேசிய பேச்சுக்கள் மத மோதலை உருவாக்கும்வகையில் அமைந்திருந்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா இன்று நிருபர்களிடம் கூறுகையில், மதநல்லிணக்கம், தேசியஒருமைப்பாட்டுக்கு விருதுநகர் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாகும். கூட்டணியில் இருந்தபோது பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று இவர்களுக்குத் தெரியாதாம். இப்போது தெரிந்துவிட்டதாம்.
திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட்டு முக்கியத் தலைவர் ஒருவர்விலகிவிட்டார் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications