தமிழகத்தின் 29 மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாகஅறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மத்திய அரசின் வறட்சிப் பகுதி நலத் திட்ட உதவிகள் இந்த மாவட்டங்களுக்குக் கிடைக்கும்.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மழையின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 2000ம் ஆண்டில் சராசரிஅளவை விட 13 சதவீதம் குறைவான மழை பெய்தது. 2001ல் 20 சதவீதம் குறைவான மழையும் 2002ம் ஆணடில்24 சதவீதம் குறைவான மழையும் பெய்தது.
இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டு பொட்டல் காடுகளாயின. இதனால் தமிழகத்தின் மீன் உற்பத்தி சரிந்துபோய்விட்டது.
நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 16 பெரிய அணைகளிலும்மொத்தக் கொள்ளவில் 10 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
2004ம் ஆண்டு துவக்கத்தில் மழையளவு ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் 11 மாவட்டங்களில் சராசரியைவிடமிகக் குறைவான அளவே மழை பெய்தது. ஆண்டின் பிற்பகுதியில் வட-கிழக்குப் பருவ மழை பொய்த்துப்போனது.
இதனால் தமிழகம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா படும்பாட்டைசொல்ல மாளாது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதன் விளைவாக சம்பா, குறுவை,தாளடி என அடுத்தடுத்து நெல் சாகுபடியை இழந்து வருகின்றனர் விவசாயிகள்.
பிற மாவட்டங்ளில் தென்னை, பனை மரங்கள் பட்டுப்போய்விட்டன. இதையெல்லாம் மத்திய வறட்சி நிவாரணக்குழுவினரே நேரில் பார்த்து அதிர்ந்தனர். வறட்சியால் தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,500கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் உதவியை மாநில அரசு கோரி வருகிறது. மத்தியக் குழுவினர் தங்களது ஆய்வைமுடித்துக் கொண்டு நேற்று டெல்லி திரும்பினர். ஒரு வாரத்தில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.இதைத் தொடர்ந்து மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசுக்கு வழங்கும்.
இந் நிலையில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற 29 மாவட்டங்களையும வறட்சி பாதித்த மாவட்டங்களாகமாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனுக்கான வட்டி, அபராத வட்டி, கூட்டுறவுக் கடனுக்கான வட்டிஆகியவற்றை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. தேர்தல் வருவதையடுத்து இந்த அரசாணயைவெளியிட்ட அரசு சூட்டோடு சூடாக வட்டியையும் ரத்து செய்தது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications