இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடவில்லை: வங்கிப் பணிகள் பாதிப்பு
சென்னை:
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்தும், மத்திய, மாநிலஅரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்நடந்தது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் ஓரளவு ஆதரவு கிடைத்தது. தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அரசுத்துறைஇன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் முழு அளவில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் வங்கிப் பணிகள் முடங்கிப் போயின.
அதே போல ஆட்டோ டிரைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும் பெரும்பாலானஆட்டோக்கள் இயங்கவில்லை. கல்லூரி ஆசிரியர்களில் ஒரு பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதே நேரத்தில் சூடு கண்ட பூனைகளான தமிழக அரசு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
இடதுசாரிக் கட்சிகளின் தொழிற் சங்கப் பிரிவுகளின் சார்பில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனால் மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அங்குபஸ்கள் கூட இயங்கவில்லை.
தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து, அரசால் ஒட்டுமொத்தாக டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது தான் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அதிகாரம்இல்லை என்ற அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தனக்கு ஏற்புடையது அல்ல என பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல கட்சியின்தலைவர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். வேலை நிறுத்ததம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம்கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை பல கட்சிகளும் நெருக்கின.
ஆனால், அப்படிப்பட்ட திருத்தம் எதையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இந் நிலையில் இந்தப்போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்தன.
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் இடதுசாரி தொழிற்சங்க ஊழியர்களும் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி., பா.ஜ.க. தொழிற்சங்கமாகபி.எம்.எஸ். ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. இதனால் ரயில் போக்குவரத்துபாதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 15 லட்சம் வங்கி ஊழியர்களும், இன்சூரன்ஸ் துறை ஊழியர்களும்தங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி முழு அளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால்அந்த அலுவலகங்கள் முழு அளவில் மூடப்பட்டுள்ளன.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன்












Click it and Unblock the Notifications