2 ஆண்டுகளாக பாக். சிறையில் வாடும் ரஜினிகாந்த்
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்ற வாலிபர் பாகிஸ்தான் சிறையில்கடந்த 2 ஆண்டுகளாக வாடி வருகிறார்.
ரஜினிகாந்த் (வயது 31) கடந்த 1991ம் ஆண்டு லெபனானில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு டெய்லராக வேலைபார்த்து வந்தார். பின்னர் கடந்த 2001ம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்த அவர் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்கையில் விதி அவரதுவாழ்க்கையில் விளையாடியது.
இத்தாலியில் ஒரு நல்ல வேலை இருப்பதாக ஒரு ஏஜென்ட் ரஜினிகாந்த்தை அணுகினார். சபலப்பட்ட ரஜினிகாந்த்,அந்த ஏஜென்ட்டிடம் ரூ. 1 லட்சத்து 20,000 பணத்தை அட்வான்ஸாக கொடுத்தார்.
துருக்கி வழியாக இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரஜினியை அவர் துருக்கிக்கு அழைத்துச் சென்றார்.
துருக்கியில் ரஜினியை தவிக்க விட்டு விட்டு ஏஜென்ட் தலைமறைவானார். இதையடுத்து துருக்கி போலீஸாகிடம்சிக்கினார் ரஜினிகாந்த். அவரைக் கைது செய்த போலீசார் ஈரான் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள்ரஜினியை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர்.
ரஜினிகாந்த்தின் நிலைமையை உணர்ந்த இந்திய தூதரகம், அவருக்கு அவரச கால பாஸ்போர்ட்டை வழங்கியது.இந்த பாஸ்போர்ட் மூலம் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய ரஜினிகாந்த் முயன்றார்.
அவருடன் ஜக்ஜீத் சிங் என்ற பஞ்சாப் மாநிலத்தவரும் சென்றார். ஆனால் இருவரையும் பாகிஸ்தான் போலீஸார்மீண்டும் கைது செய்து லாகூர் சிறையில் அடைத்துவிட்டனர்.
இதையடுத்து இருவரும் லாகூர் நகர நீதிமன்றத்தில் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை பரிசீலித்த நீதிமன்றம்2004ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிக்குள் இருவரையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுமாறு உத்தரவிட்டது. இதன்படிஜக்ஜீத் சிங் மட்டும் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், ரஜினிகாந்த் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவரது தாயார் மணிமேகலை கண்ணீர் மல்க கூறுகையில்,மிகவும் கஷ்டப்பட்டு ரஜினியை லெபனானுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் ஏஜென்ட்டின் பேச்சைக் கேட்டுஏமாந்து விட்டான்.
இப்போது பாகிஸ்தான் சிறையில் வாடி வருகிறான். அவனை இந்தியாவுக்கு அனுப்புமாறு பாகிஸ்தான் நீதிமன்றம்உத்தரவிட்டும் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுப்பாமல் வைத்துள்ளனர். பாகிஸ்தானில் அவன் எந்தக் குற்றமும்புரியவில்லை என்றார்.
ரஜினிகாந்த்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு மதிமுக தலைவர் வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு மலர்ந்துள்ளதாலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளதாலும், ரஜினியின் குடும்பத்தினரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ரஜினி வீடு திரும்பும் நாளை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications