வாஷிங்டன்: 3 சீக்கியர்களை சுட்டுக் கொன்ற சீக்கியர் அடித்துக் கொலை
வாஷிங்டன்:
வாஷிங்டனில் சீக்கியர்கள் மீது அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர்பலியாயினர். இதையடுத்து அவரை சீக்கியர்களே அடித்துக் கொன்றனர்.
இதில் 50, 60 வயதான 2 சீக்கியர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கிருந்த பிறசீக்கியர்கள் அவரை அடித்தே கொன்றனர்.
இவர் சுட்டதில் பலத்த காயமடைந்த 45 வயதான சீக்கியர் ஒருவர் சான்ஜோஸ் மருத்துவமனையில் இறந்தார்.மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சர்வான் சிங் கில் என்பவர் கூறுகையில், நாங்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில்இங்கே சீட்டாடுவது வழக்கம். பெரும்பாலும் முதிய சீக்கியர்கள் இங்கே கூடுவர்.
இந் நிலையில் நேற்றும் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் துப்பாக்கியுடன் அங்கு வந்துபஞ்சாபியில் அனைவரையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். அவர் யார் என்றே தெரியவில்லை. இதற்குமுன் அவரை நாங்கள் பார்த்தும் இல்லை. திட்டிக் கொண்டே இருந்தவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இதையடுத்து அனைவரும் எழுந்து ஓடினோம். நான் ஒரு மரத்தின் பின்னால் மறைந்ததால் உயிர் தப்பினேன்.தனது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்தவுடன் மீண்டும் அதில் குண்டுகளை அந்த நபர் நிரப்ப ஆரம்பித்தார்.
அப்போது தான் பின்னால் இருந்து வந்த ஒருவர் அவரைத் தாக்கி கீழே விழச் செய்தார் என்றார்.
இதன் பின்னர் அங்கிருந்த பிற சீக்கியர்கள் சேர்ந்து அவரை அடித்தே கொன்றுள்ளனர்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications