கருணாநிதி, வைகோ, ராமதாஸ் மீது பா.ஜ.க. கடும் பாய்ச்சல்
சென்னை:
கருணாநிதி, வைகோ, ராமதாஸ் மீது இன்று பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கடும் தாக்குதல் தொடுத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பா.ஜ.க. தேர்தல் குழுக் கூட்டம் நாளை மீண்டும் நடக்கிறது. இதில் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடுகலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும்.
அதன் பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை நாயுடு அறிவிப்பார். நாளையே அறிவிப்பார் என்று சொல்ல முடியாது.அதை அவர் தான் முடிவு செய்வார்.
பா.ஜ.கவுக்கு எதிராக பா.ம.க. தலைவர் ராமதாஸ் பேச ஆரம்பித்துள்ளார். அவர் தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைஎடுப்பார். கொள்கை ஏதும் இல்லாதவர். யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டு சேருவார். ரஜினிக்குஎதிராக ராமதாஸ் பேசியபோது அதை முதலில் கண்டித்தது நாங்கள் தான்.
அதே போல கூட்டணி மாறும்போது தகுந்த தாளத்தைப் போடுபவர் கருணாநிதி. அவர் சொல்வதையெல்லாம்தமிழக மக்கள் நம்புவார்கள் என்று நினைத்து உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போலி மதசார்பின்மையைப் பேசி வருகிறார். 4 வருடம் எங்களோடுஇருந்துவிட்டு இந்தியா ஒளிரவில்லை, இருண்டுவிட்டது என்கிறார்.
40 தொகுதிகளிலும் திமுக, மதிமுக, பா.ம.க. கூட்டணியை தோற்கடிப்போம் என்றார் ராதாகிருஷ்ணன்.
சென்சார் போர்ட்டில் பா.ஜ.கவினர் ஆதிக்கம்:
இதற்கிடையே தமிழகத்தில் சினிமாக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டில் 5 பா.ஜ.கவினர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய செய்தித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தநியமனங்களைச் செய்துள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, லலிதா சுபாஷ், ராஜசிம்மன், சுஜாதா ராவ், ஜெய்சங்கர்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications