பதவிக்கு அலையும் காங்கிரஸார்: 10 சீட்டுக்கு 422 பேர் போட்டி !
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட 422 பேர் மனு தாக்கல்செய்துள்ளதால் யாருக்கு சீட் தருவது, யாரை விடுவது என்று புரியாமல் அந்தக் கட்சி குழம்பிப் போயுள்ளது.
இந் நிலையில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் இன்றும் நேர்காணல் நடந்தது. இன்று மாலையேவேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சி மேலிடத்திற்குப் பட்டியல் அனுப்பப்படவுள்ளது.
கோஷ்டிகள் அதிகம் கொண்ட காங்கிரசில் ஒரே தொகுதிகளை பல்வேறு கோஷ்டிகள் கேட்கின்றன. ராசிபுரம் தனிதொகுதியைக் கேட்டு 140 பேர் கேட்டு மனு கொடுத்துள்ளனர். நீலகிரி தொகுதிக்கு மட்டுமே குறைந்த அளவாக 10பேர் மனு செய்துள்ளனர்.
இவர்களிடம் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களை உள்ளடக்கிய 6 குழுக்கள் நேர்காணல் நடத்தி வருகின்றன.நேற்று வரை 356 பேரிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று மிச்சமுள்ளவர்களிடமும் நேர்காணல்முடிக்கப்பட்டுவிடும்.
இதன் இறுதியில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள், தேர்தல் குழுவினர் மற்றும் எம்.எல்.ஏக்களின் கூட்டம்நடைபெறுகிறது. அப்போது, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஆனால், இந்த நேர்காணலே இது வெறும் கண்துடைப்பு தான். இதில் தேர்வாகும் நபர்களுக்கு சீட் உறுதியில்லை.இறுதிப் பட்டியலை முடிவு செய்யப் போவது கட்சியின் டெல்லி தலைமை தான். இதனால் மாநிலத் தலைவர் வாசன்,முன்னாள் தலைவர் இளங்கோவன் கோஷ்டிகள் டெல்லியில் தங்களது செல்வாக்கை வைத்து அதிகபட்சஇடங்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இவர்களைத் தவிர குட்டி கோஷ்டிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் உள்ள நிர்வாகிகளைப் பிடித்து சீட்பிடிக்க முயல்கின்றன.
மாலையில் நேர்காணல் முடிந்தவுடன் பட்டியலுடன் வாசன் டெல்லி செல்வார். அவரைத் தொடர்ந்து எல்லாகோஷ்டிகளின் தலைகளும் டெல்லிக்கு காவடி எடுக்கும். அங்கு முட்டி மோதி தங்களது ஆதரவாளர்களுக்கு சீட்பெறுவார்கள்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications