மார்ச் 1ம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 1ம் தேதிவெளியிடப்படுகிறது. அன்றைய தினம் தான் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நேர்காணலின்போது வேட்பாளர் தரப்பில் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட ஒப்புக் கொண்ட தொகையை வரும்29ம் தேதிக்குள் மனுதாரர்கள் கட்டி விட வேண்டும்.
அப்போதுதான் அவர்களது பெயரைப் பரிசீலிக்க ஏதுவாக இருக்கும். அப்படிக் கட்டாதவர்களின் பெயர்கள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் கட்டியுள்ள தொகை உடனடியாக அவர்களுக்குத் திருப்பிஅளிக்கப்பட்டு விடும். வேட்பாளர் பட்டியல் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆளும்கட்சிகளாக உள்ள அதிமுக தரப்பிலும் பா.ஜ.க. தரப்பிலும் பணம் பெருமளவில் இறக்கிவிடப்படும்என்பதால், தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ. 1 கோடி வரை செலவிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
மேலும் 15 தொகுதிகளிலும் வேட்பாளருக்குத் தேவையான கூடுதல் நிதியை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும்,சுற்றுப் பகுதி மாவட்டங்களின் நிர்வாகிகளும் திரட்டித் தந்து வேட்பாளருக்கு உதவ வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை தரும் ரூ. 1 கோடி தவிர ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளரும் நிர்வாகிகளும் குறைந்தபட்சம் ரூ. 50லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்று திமுக நினைக்கிறது.
இந்தத் தேர்தலுக்காக கடந்த ஆண்டிலேயே அனைத்து மாவட்டக் கூட்டங்கள் நடத்தி திமுக தலைமை ரூ. 30 கோடிவரை திரட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தரப்பில் ஒவ்வொரு தொகுதியின் செலவும் அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தவிரதலைமையும் பெரும் நிதியைத் தரும். அமைச்சர்கள் தங்கள் துறைகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி முடிந்தஅளவுக்கு நிதியை செலவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக தரப்பில் தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ. 3 கோடியாவது செலவிடுவார்கள் என்று திமுகநினைக்கிறது. இதைச் சமாளிக்கவே நிதி விஷயத்தில் எப்போதுமே மிகக் கறாராக இருக்கும் திமுக தலைவர்கருணாநிதி இந்த முறை தனது வேட்பாளர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே கெடுபிடி காட்டி வருகிறார்.
கருணாநிதி பேட்டி:
இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது: வேட்பாளர் தேர்வுப் பணி முடிந்துவிட்டது.வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதும் சென்னையில் இருந்து பிரச்சாரம் தொடங்கப்படும். என்னால் முடிந்தஅளவு பிரச்சாரம் செய்வேன்.
வங்கக் கடலில் புயல் உருவானது போல திமுக கூட்டணி உருவானது கண்டு அதிமுக பீதியடைந்துள்ளது. புயல்வருவதை அறிந்து தான் மீனவர்கள் உள்பட பலருக்கும் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார் ஜெயலலிதாஎன்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications