மதுரை உயர்நீதிமன்ற கிளை: சென்னை வழக்கறிஞர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை
சென்னை:
மதுரையில் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கப்படவுள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனால் தங்களுக்கு வர வேண்டிய பிசினஸ் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்குப் போய்விடும் என்பதால் இந்தஎதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தின் தென்கோடி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்குகளுக்கு வந்து போவது மிகவும் சிரமமாகஇருந்ததால் மதுரையில் ஒரு உயர் நீதீமன்றக் கிளையை ஆரம்பிக்க வேண்டும் என்று நெடுங்காலத்துக்கு முன்பேகோரிக்கை வைக்கப்பட்டது.
பெரும் இழுத்தடிப்புகள், காலதாமதங்களுக்குப் பின் ஒரு வழியாய் மதுரையில் இந்தக் கிளை அமைக்கப்பட்டது.இந்தக் கிளையின் விசாரணை வரம்பின் கீழ் 16 மாவட்டங்களை ஒதுக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மதுரைக்கு இத்தனைமாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சங்கத்தின் அவசர பொதுக் குழுக் கூட்டம் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் சென்னையில் நடந்தது.
பின்னர் பிரபாகரன் நிருபர்களிடம் பேசுகையில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 16 மாவட்டங்களைமதுரைக்கு ஒதுக்கி விட்டால் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 14 மாவட்டங்கள் மட்டுமே இருக்கும்.
மேலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகப்பட்டனம், திருவாரூர், பெரம்பலூர் ஆகியமாவட்டங்கள், சென்னைக்குத் தான் அருகாமையில் உள்ளவை. மதுரையில் இருந்து அவை தூரத்தில் உள்ளன.
எனவே 16 மாவட்டங்கள் ஒதுக்கும் முடிவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 42 நீதிபதிகளில் 7 நீதிபதிகளை மதுரை கிளைக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேபோல, மதுரை கிளைக்கு ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கவும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான உயர் நீதிமன்றக் கிளைமீண்டும் கனவாக மாறிவிடாமல் இருந்தால் சரி.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications