சாகித்ய அகாடமி விருது பெற்றார் வைரமுத்து
டெல்லி:
கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்காக நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்து கவிதை, நாவல்,சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆனந்த விகடன்இதழில் வைரமுத்து தொடர்கதையாக எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விருதுடன் நினைவுப் பரிசையையும், ரூ.50,000 ரொக்கப் பணத்தையும் சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த்நாரங் வைரமுத்துக்கு வழங்கினார்.
பின்னர் வைரமுத்து கூறுகையில், வட்டார மொழி வழக்கைப் பயன்படுத்தியதுதான் நாவலின் சிறப்பாகும். விருதுவழங்கப்பட்டபோது, எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. டெல்லிப் பூக்கள் என்னை அலங்கரித்தன. அப்போதுநான் கள்ளிப்பூக்களைத்தான் நினைத்தேன். அந்தப் பூக்கள் இல்லாமல் இந்த டெல்லிப் பூக்கள் இல்லை.
இன்னொரு முறை இப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். இதுதான் என் நாவலுக்குக் கிடைத்தஉண்மையான விருதாகும். இன்னொரு இதிகாசம் படைப்பதற்கான கரு கிடைத்துள்ளது. அது என்னவென்றுஇப்போது சொல்ல மாட்டேன் என்றார் வைரமுத்து.
கலைஞர் வாழ்த்து:
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் வைரமுத்துவை வாழ்த்தி எழுதியுள்ளார். அவர் தனதுவாழ்த்தில், நடந்த கதையை நடமாடும் தமிழில் நனைத்துக் கொடுத்துள்ள திறமையை நினைத்து இந்த விருதுபோதுமானதல்லவே என்ற மனக்குறையுடன் தம்பியை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications