வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடும் பா.ஜ.க.!
சென்னை:
7 தொகுதிகளில் போட்டியிடவுள்ள பாரதீய ஜனதாக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள்கிடைக்காமல் திண்டாடி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடவுள்ளது தமிழக பா.ஜ.க. அக்கட்சிக்கு7தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 7 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்கட்சி தீவிரமாக உள்ளது.
இதில், பாண்டிச்சேரியில் லலிதா குமாரமங்கலம், நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், கோவையில்சி.பி.ராதாகிருஷ்ணன், நீலகிரியில் மாஸ்டர் மாதன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஆனால்சிதம்பரம் (தனி), வட சென்னை, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கட்சியினர் யாருமே முன்வராதபரிதாப நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்தத் தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு சிறிதும் வெற்றி வாய்ப்பு இல்லாததே. இதனால் பா.ஜ.க நிர்வாகிகள்பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நூதன சிக்கல் குறித்து கட்சித் தலைவர் வெங்கையா நாயுடுவிடம்தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் முன்பு போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதியை மீண்டும்போட்டியிட வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
அதேபோல, வட சென்னை தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட தேறாது என்ற நிலை உள்ளதால் அங்கும்யாரும் போட்டியிட மறுக்கிறார்கள். முதலில் குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை போட்டியிடலாம் என்றுகூறப்பட்டது. ஆனால் தற்போது அவரும் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தர்மபுரி தொகுதியைப் பொருத்தவரை அங்கு பா.ஜ.கவுக்குக் கொஞ்சம் கூட செல்வாக்கே இல்லை. இதனால்வேட்பாளராக யாரைப் போடுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
வெற்றி வாய்ப்பு ஓரளவு உள்ளதாகக் கருதப்படும் சிவகங்கை, தென்காசி மற்றும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்என்ற நிலையில் இருந்த புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளை வாங்காமல் விட்டதற்காக இப்போதுவருத்தப்படுகிறார்களாம் பா.ஜ.க. தலைவர்கள்.












Click it and Unblock the Notifications