லாரி-டாடா சுமோ மோதல் 2 பேர் பலி-11 பேர் காயம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி மீது புதுமணத் தம்பதிகள் வந்த டாடா சுமோ மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த மணிவண்ணன் (25) என்பவருக்கும், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 22ம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகள் உறவினர்களுடன் டாடா சுமோ காரில் ஆலங்குளத்திலிருந்து செய்யூருக்கு பயணமானார்கள். பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தை நெருங்கும்போது, பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சிமெண்ட் லாரி மீது டாடா சுமோ மோதியது.
இதில் மணமகனின் தந்தை உதிரமாலை (61) மற்றும் மணப்பெண்ணின் உறவினர் ராமசாமி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, பின்பு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications