கோவை, நாகர்கோவில், நீலகிரிக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
கோவை, நாகர்கோவில், நீலகிரி தொகுதிகளில் சிட்டிங் எம்.பிக்களே போட்டியிடுவார்கள் என்று பா.ஜ.க.அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை தொகுதியில் கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், நாகர்கோவில் தொகுதியில் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நீலகிரி தொகுதியில் கட்சியின் மாநில துணைத் தலைவரான மாஸ்டர்மாதனும் போட்டியிடுவார்கள்.
வட சென்னை, தர்மபுரி, சிதம்பரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். இந்தப்பட்டியலை வரும் 1ம் தேதி டெல்லியில் கட்சியின் மத்திய தேர்தல் பணிக் குழுவிடம் சமர்ப்பிப்போம்.பாண்டிச்சேரி தொகுதிக்கான வேட்பாளரை அம்மாநில பா.ஜ.க. தேர்வு செய்யும்.
பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவுடன் தொகுதி மாற்றம் குறித்துப் பேசவில்லை. இனிஜெயலலிதா தொகுதியை மாற்றினாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
இந்தியா ஒளிர்கிறது என்ற மத்திய அரசின் விளம்பரத்தைக் குறை கூறும் தகுதி திமுக தலைவர் கருணாநிதிக்குக்கிடையாது. அவர் முதல்வராக இருந்தபோது, தங்களது ஆட்சியின் சாதனைகளை விளக்கி பத்திரிக்கைகளில்விளம்பரம் செய்தார். இப்போது எங்களைக் குறை கூறுகிறார் என்றார்.
வட சென்னை, சிதம்பரம், தர்மபுரி தொகுதிகளில் போட்டியிட யாரும் முன்வராததால், வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் மாநில பா.ஜ.க. திணறி வருகிறது. அதன் காரணமாகவே மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களைஅறிவிக்க முடிந்த பா.ஜ.கவால் இந்த மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications