ஜனனிக்கு ஜாமீன் கிடைத்தது: தமிழகத்தில் நாடகம் நடப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி:
கஞ்சா வழக்கில் மாட்டிவிடப்பட்டு, கைதாகி சிறையில் இருக்கும் நடராஜனின் தோழி ஜனனிக்கும் அவரதுதாயாருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்று என்ற ஜனனயின் வாதத்தை தவறு என்று நிரூபிக்க அரசுத் தரப்பில் போதியஆதாரம் இல்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நீதித்துறையிலும், நிர்வாகத்துறையிலும் ஒருவிதநாடகம் நடக்கிறது என்றும் மிகக் கடுமையான கருத்து தெரிவித்துள்ளது.
(உச்ச நீதிமன்றத்திடம் ஜெயலலிதா அரசு சூடு வாங்குவது இது முதல்முறையல்ல. காவிரி விவகாரத்தில் பிரதமரைக்கேவலமாகப் பேசியதற்காக ஜெயலலிதாவை நீதிமன்றம் கண்டித்தது. டான்சி வழக்கில் தவறு நடந்திருக்கிறதுஎன்றும் நீதிமன்றம் கூறியது. அதே போல ஜெயலலிதா-சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கை தமிழக நீதிமன்றம்நடத்திய முறையையும் உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது)
ஜாமீன் கோரி ஜனனி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் விசாரித்தனர். ஜனனியை ஜாமீனில் விடுவித்துஅவர்கள் அளித்த தீர்ப்பின் விவரம்:
ஜனனியும் அவரது தாயார் ரமீஜாவும் ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்து மதுரையிலேயேதங்கியிருக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் சென்று கையெழுத்திடவேண்டும். 3 மாதங்கள் வரை இந்தக் கையெழுத்துப் போட வேண்டும்.
இவர்கள் மீதான கஞ்சா வழக்கை மதுரை போதைத் தடுப்பு நீதிமன்றம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.மதுரைக்கு வெளியே செல்வதாக இருந்தால் அந்த நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
மேலும் தன் மீதான கஞ்சா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஜனனி வாபஸ்பெற்றுக் கொண்டுள்ளதால், அது தொடர்பாக ஜனனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி கைது செய்யப்பட்ட ஜனனியையும், அவரது தாயாரையும் போலீசார் முறைகேடாகதங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 10ம் தேதி தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கணக்கில்காட்டியுள்ளனர். பெண்களைக் கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார்கடைபிடிக்கவில்லை.
இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டதாக ஜனனி தரப்பு கூறுவதை தவறென்று அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன்நிரூபிக்கவில்லை.
தமிழகத்தில் நிர்வாகத்துறையாகட்டும், நீதித்துறையாகட்டும் அல்லது சாமானிய மனிதன் சம்பந்தட்டவிஷயமாகட்டும்.. அதில் ஏதோ ஒருவித நாடகம் நிலவுவது மட்டும் தெரிகிறது என்றனர் நீதிபதிகள்.
அப்போது குறுக்கிட்ட ஜனனியின் வழக்கறிஞரான கபில்சிபல், அதனால்தானோ என்னவோ சமீபகாலமாகஅரசியலில் நிறைய நடிகர்கள் சேருகின்றனர் என்ற பா.ஜ.கவை மறைமுகத் தாக்கினார். (உச்ச நீதிமன்றத்தில் மூத்தவழக்கறிஞரான கபில் சிபல் காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது)
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications