16 தொகுதிகளில் போட்டியிடுகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உதித்த ஜாதிக் கட்சிகளில் ஒன்றுதான் புதிய நீதிக் கட்சி.முதலியார்கள், பிள்ளைமார்களை மனதில் வைத்து தோன்றிய அக் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் தரப்பட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத புதிய நீதிக் கட்சி அதற்குப் பின் காணாமல் போனது. இந் நிலையில்நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் இந்தக் கட்சி செயல்பட ஆரம்பித்துள்ளது.
ஆனால் கூட்டணியில் சேர்க்கத்தான் யாரும் இல்லை. இதனால் தனித்துப் போட்டியிட்டு தங்களது பலத்தைநிரூபிப்போம் என்று மார் தட்டி வருகிறார் இதன் தலைவரும் செல்வந்தருமான ஏ.சி.சண்முகம்.
சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிட பலர் மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், வேலூரில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் நாங்கள்போட்டியிடப் போகும் 16 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டோம். இப்போது கட்சியினரின் கருத்துக்களைஅறிந்து வருகிறோம்.
தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளமூன்றாவது கூட்டணியான மக்கள் கூட்டணியில் நாங்களும் இணைகிறோம். எங்களுக்குள் தொகுதிப் பங்கீடுகுறித்து பிரச்சினையே வராது என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications