ஒரிசாவிலிருந்து 6 தமிழக கொத்தடிமைகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொத்தடிமைகளாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரிசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஒரிசா மாநிலத்தின்கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் இவர்கள் கொத்தடிமைகளாக இருந்துவந்தனர்.

மீட்கப்பட்டவர்கள்: ஜெயலட்சுமி. அவரது மகன்கள் வினோத், மகள் அருணா தேவி, தங்கேஸ்வரி, 10 மாதகுழந்தை மற்றும் தேனியைச் சேர்ந்த மாரிமுத்து.

ஜெயலட்சுமியின் கணவர் ரவிக்குமார் கடந்த ஜனவரி 6ம் தேதி இங்கிருந்து தப்பி மதுரை வந்தார். மதுரையில்உள்ள சோகோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திடம் தங்களது நிலைமையைக் கூறினார்.

இதையடுத்து சோகோ நிறுவனம் ஜெயலட்சுமி உள்ளிட்டவர்களை மீட்க முடிவு செய்து அதற்கானநடவடிக்கைகளில் இறங்கியது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனின் கவனத்திற்கு இது கொண்டுசெல்லப்பட்டது. அவர் கஞ்சாம் மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ளுமாறு சோகோ நிர்வாகிகளைஅறிவுறுத்தினார்.

இதன்படி சோகோ நிறுவனத்தினர் கஞ்சாம் மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். அவர்களுக்கு ஒரிசா போலீஸாரும்உதவினர். இறுதியில் ஜெயலட்சுமி உள்ளிட்ட 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டனர்.இவர்களை பழனியைச் சேர்ந்த பூச்சியம்மாள் என்ற ஏஜென்ட்தான் ஒரிசாவுக்கு அனுப்பி வைத்ததாகத்தெரியவந்துள்ளது.

சென்னை வந்து சேர்ந்த அவர்கள் பின்னர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+