லாட்ஜில் நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்ற பைனான்சியர் !!
ஒசூர்:
ஒசூரில் லாட்ஜில் தங்கியிருந்த விந்தியாவை சினிமா பைனான்சியர் ஒருவர் கற்பழிக்க முயன்றார். முதலில் அவரைத் தப்ப விட்டபோலீசார் பின்னர் அவரைக் கைது செய்தனர்.
ஓவராக ஆட்டம் போட்டதாலோ என்னவோ !!) விந்தியாவுக்கு கடும் இடுப்பு வலி ஏற்பட்டது.கன்னிநிலா படத்தின் சூட்டிங்குக்காக சென்னையில் இருந்து ஒசூருக்குக் காரிலேயே வந்தார் விந்தியா.
காரில் போகும்போதே வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகியுள்ளது. அதைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில்விந்தியா பங்கேற்றார். ஆனால், வலி அதிகமாகவே ஒசூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆனார்.
சில நாட்கள் பெட் ரெஸ்ட்டில் இருக்கச் சொல்லி டாக்டர் அட்வைஸ் செய்ததால் அங்குள்ள சிவரஞ்சனி லாட்ஜில் தங்கினார்.நேற்றிரவு தரையில் அவர் படுத்திருக்க, கட்டிலில் அவரது தந்தை யோகானந்தனும் மேக்அப் மேன் ரமணாவும் தூங்கியுள்ளனர்.இந்த லாட்ஜுக்கு பக்கத்து ஹோட்டலில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் நள்ளிரவில் விந்தியா தங்கியிருந்த அறையின் பின் பக்கக் கதவை கள்ளச் சாவி போட்டுத் திறந்து கொண்டு 4 பேர்உள்ளே நுழைந்தனர். இதில் பைனான்சியரான கமல்ராஜ் என்பவர் விந்தியாவின் மீது பாய்ந்தார். இதையடுத்து விந்தியா அலறிசத்தம்போடவே தந்தையும், மேக் அப் மேனும் விழித்தெழுந்தனர்.
இதையடுத்து அந்த நபர்களுக்கும் விந்தியாவின் தந்தை, மேக் அப் மேனுக்கும் இடையே அடிதடி நடந்துள்ளது. சண்டைநடந்தபோதும் கூட விந்தியாவை கட்டிப் பிடிப்பதிலும், அவரைத் தொடுவதிலுமே தீவிரமாக இருந்துள்ளார் கமல்ராஜ்.இதையடுத்து உள் அறைக்குள் சென்று அதை விந்தியா பூட்டிக் கொண்டார்.
கூச்சல் குழப்பம் அடிதடியால் மற்ற அறையில் இருந்தவர்களும் அஙகே ஓடிவரவே கமல்ராஜும் கும்பலும் தப்பியோடிவிட்டது.கமல்ராஜூடன் மேலும் 8 பேர் அங்கு வந்து லாட்ஜூக்கு வெளியே நின்றனர்.
நள்ளிரவில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டும் கூட அந்த லாட்ஜின் நிர்வாகத்தினர் விந்தியாவின் உதவிக்கு வரவில்லை.
இதனால் இரவோடு இரவாக அந்த லாட்ஜில் இருந்து வெளியேறிய விந்தியா, படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த பக்கத்துஹோட்டலில் போய் அழுதவாறே விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீசாரைத் தொடர்பு கொண்டனர். ஆனால், போலீசார் இந்தவிஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்தைத் தொடர்பு கொண்டு விந்தியா பேசினார். அவர் உடனடியாககாவல்துறை டிஜிபியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல, இன்று காலை தான் ஒசூர் போலீசார் இந்த வழக்கையே பதிவுசெய்தனர்.
இரவில் தப்பியோடிய இருவரும் ஹோட்டலுக்கு வெளியே காரையும் செல்போனையும் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அவற்றைவைத்து விசாரித்தபோது தான் வந்தது கமல்ராஜ் என்பது தெரியவந்தது. ஒசூரில் வட்டித் தொழிலோடு, சினிமாக்களுக்கும்பைனான்ஸ் செய்து வரும் கமல்ராஜ் பெரிய ரெளடியாவான்.
இதற்கிடையே போலீசாரிடம் கமல்ராஜின் கூட்டாளிகளான சம்பத், சுந்தர் ஆகியோர் மட்டுமே சிக்கினர். கமல்ராஜ்தலைமறைவாகிவிட்டான். அவனை போலீசாரே தப்ப விட்டுவிட்டனர்.
வட்டிக் கடை நடத்தும் அவனிடம் போலீசார் நிறையவே மாமூல் வாங்கித் தின்றுள்ளதால், அவனைப் பிடிக்க சங்கோஜப்பட்டுஅவனை தப்ப விட்டதாகத் தெரிகிறது. ஆனால், உயர் மட்டத்தில் இருந்து பெரும் நெருக்குதல் வந்ததையடுத்து கமல்ராஜைபின்னர் போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து விந்தியா கூறுகையில், வந்தவர்கள் முழு போதையில் இருந்தனர். அவர்களிடம் இருந்து கப் அடித்தது. கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே அதில் ஒருவன் என்னை நெருங்கினான். தந்தையும் மேக்அப் மேனும் இருந்ததால் தப்பினேன்என்றார்.
கமல்ராஜுக்கு விந்தியா ரூமின் கள்ளச் சாவியைத் தந்தது யார் என்று தெரியவில்லை. இதில் லாட்ஜ் ஊழியர்களுக்கும்தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications