சாப்ட்வேர் பயிற்சி: ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் ரூ. 5 கோடி வசூலித்து மோசடி
மதுரை:
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயிற்சி அளித்து வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் தலா ரூ.30,000 முதல் 50,000 வரை வசூலித்த ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் தலைமறைவாகிவிட்டது.
இந்த நிறுவனம் மொத்தம் ரூ. 5 கோடி வரை மாணவர்களிடம் லவட்டியுள்ளத் தெரிகிறது.
வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார் (38) மற்றும் கும்பல் எஸ்.டி.வி. சாப்ட்வேர் டிரெனிங்நிறுவனத்தைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அண்ணாநகரிலும் ஒரு கிளையை ஆரம்பித்தனர்.
இதில் சேர்ந்து பயிற்சி பெற்றால் வேலை உறுதி என பத்திரிக்கைகளில் பெரிய விளம்பரங்கள் தந்தனர்.
தங்களது தலைமை அலுவலகதம் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், பெங்களூர், ஹைதராபாத், புனே, சென்னையில் பலசாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஜாப் பிளேஸ்மென்ட் கன்சல்டன்சியாக தங்களது நிறுவனம் செயல்படுவதாகவும் புருடா விட்டனர்.
இதை நம்பி சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் ரூ. 50,000 வரை பணம் கட்டினர்.
ஆனால், அத்தனை பேருக்கும் பயிற்சியளிக்க வசதியோ, இடமோ இல்லாத நிலையில் வாரத்துக்கு இரண்டு நாள் கிளாஸ், ஒருநாளைக்கு 2 மணி நேரம் தான் கிளாஸ் என்று மாணவர்களை பல குரூப்களாப் பிரித்து ஷிப்டு முறையில் வரச் செய்தனர்.
கடந்த வாரம் இந்தப் பயிற்சி தொடங்கியது. ஆனால், கம்ப்யூட்டர்கள் போதாமல், உட்காரக் கூட இடமில்லாமல் இருந்ததால்பணத்தைக் கட்டிய மாணவர்கள் அதைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் மாணவர்களுக்கும் நிறுவனத்தை நடத்தியவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பயிற்சி நிறுத்தப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள்சிவக்குமாரிடம் சென்று கேட்டபோது, விரைவில் பயிற்சி மீண்டும் தொடங்கும் என்றும்பணத்தைத் தர முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்த நிறுவனத்தின் இரு கிளைகளும் நேற்றிரவு திடீரென மூடப்பட்டன. நிறுவனத்தை நடத்திய யாரும் ஊரில்இல்லை. வீடுகளிலும் ஆட்கள் இல்லை. அவர்களது செல்போன்களும் இயங்கவில்லை.
நிறுவனத்தை மூடி விட்டு சிவக்குமாரும் மற்றவர்களும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று காலை அந்த நிறுவனத்தின் வளசரவாக்கம் கிளையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அதிர்ச்சி காததிருந்தது. உள்ளே இருந்த பெரும்பாலான கம்ப்யூட்டர்களை எல்லாம் அந்தக் கும்பல்ஏற்கனவே எடுத்துக் கொண்டு போயிருந்தது.
மீதமிருந்த சில கம்ப்யூட்டர்களையும் இன்று உள்ளே புகுந்த மாணவர்கள் எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே அந்த நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர்களை வாடகைக்குக் தந்த நிறுவனத்துக்கும் கடந்த இரு மாதங்களாக பணம்தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களது கம்ப்யூட்டர்களையும் கூட எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
அந்த நிறுவனம் ரூ. 5 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரவயல் போலீசார் இது குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications