பெரியகுளத்தில் 73,000 போலி வாக்காளர்கள் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் 73,820 போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்துநீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குப்புகார் சென்றது. இதையடுத்து சென்னை, மதுரை மாவட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க ஆணையம்உத்தரவிட்டது.

இதில் பெரியகுளம் எம்.பி. தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 73,820 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இந்தத் தொகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 11,21,725 வாக்காளர்கள் இருந்தனர்.

இந்தப் பட்டியலில் தீவிர ஆய்வு நடத்தி 73,820 பேரின் பெயர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இவர்கள் போலி வாக்காளர்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியகுளம் தொகுதியில் 10,47,905 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10,000 போலி வாக்காளர்களும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 40,000போலி வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கமிஷனிடம் எதிர்க் கட்சிகள் புகார்:

இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் டெல்லி சென்றுதலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளனர்.

அதில், தமிழகத்தில் நடந்த பல இடைத் தேர்தல்களில் பெரும் முறைகேடுகளில் அதிமுக அரசு ஈடுபட்டது. சட்டம் ஒழுங்கைநிலைநாட்ட போலீசார் உதவவில்லை. ஆளும் கட்சியினரின் ரவுடித்தனத்துக்கு போலீசார் துணை நின்றனர். மேலும் ஆட்களைஅழைத்துச் சென்று வருவாய் அதிகாரிகளிடம் தாற்காலிகமாக அடையாள அட்டைகள் வாங்கித் தந்து அதை வைத்து பலரையும்கள்ள ஓட்டளிக்க வைத்தனர். இதில் போலீஸ்-அதிமுக கூட்டணி இணைந்து செயல்பட்டது.

இதனால் தாற்காலிகமாக கிராம அதிகாரி, வருவாய் அதிகாரியிடம் அடையாள அட்டை வாங்கி வந்து வாக்களிக்க தடை விதிக்கவேண்டும். தமிழத்தின் எல்லா தொகுதிகளிலும் பாரா மிலிட்டரிப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் நேர்மையான தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்பதாக கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: இதற்கிடையே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 தேர்தல் அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைய அதிகாரி கே.ஜே.ராவ் மதுரைக்கு ஆய்வுக்காக வந்தபோது இந்த இரண்டு அதிகாரிகளும் பணியில் இல்லாமல்விடுப்பில் சென்றிருந்தனர். இதன் காரணமாக இவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன்உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+