கருணாநிதி மீது சுலைமான் சேட் பாய்ச்சல்: நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூச்சல்
சென்னை:
தனது கட்சிக்கு கூட்டணியில் இடம் கொடுக்காமல் திமுக தலைவர் கருணாநிதி கேவலப்படுத்திவிட்டதாகவும்,ஏமாற்றிவிட்டதாகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு அவரது கட்சியே தொகுதி ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மலையாளியான இவர் கேரளாவின் பொன்னானி மக்களவைத் தொகுதியின் எம்.பியாக இருந்தார். இந்த முறை அந்தத்தொகுதியை அகமது என்பவருக்கு கட்சி ஒதுக்கிவிட்டது.
இந் நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் சீட் வாங்கி போட்டியிட அவர் திட்டமிட்டிருந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவர்கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்காக கருணாநிதியைப் பாராட்டவே அவரை சந்தித்ததாக அப்போதுகூறினார் சேட். இந் நிலையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கினார்கருணாநிதி.
சுலைமான் சேட்டின் கட்சிக்கு இடம் தரவில்லை. இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த சேட்,
கூட்டணியில் எங்களுக்கு இடம் ஒதுக்குவதாக கருணாநிதி உறுதியளித்தார். ஆனால், பின்னர் காங்கிரசிடம் கேட்டு சீட் வாங்கிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார். இதன்மூலம் எங்களை அவர் அவமானப்படுத்திவிட்டார், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்.
வெறும் 10 சீட்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கு அந்தக் கட்சியையும் கேவலப்படுத்திவிட்டார் கருணாநிதி.
கருணாநிதியை யாரும் நம்ப முடியாது. தேர்தலுக்குப் பின் அவர் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்குக் கூட போய்விடுவார். பிரதமர்வாஜ்பாயை விமர்சிக்க வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளது பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டுசேரத்தான்.
இதனால் திமுகவுக்கு எதிராக திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, கண்ணப்பன் ஆகியோர் அமைத்துள்ள மக்கள் கூட்டணிஎன்ற மூன்றாவது அணியில் எங்கள் கட்சி சேரும். திமுகவை எதிர்த்துப் போட்டியிடுவோம் என்றார்.
உடனிருந்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், விரைவில் எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள்விரைவில் சேரும் என்றார்.
மக்கள் தமிழ்த் தேசம் தலைவர் கண்னப்பன் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளத்தின் வில்-அம்பு சின்னத்தில் எங்கள் கூட்டணிவேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரான திருமாவளவன் கூறுகையில், நான் ராஜினாமா செய்த மங்களூர் சட்டமன்றத் தொகுதியில்எங்கள் கட்சி மீண்டும் போட்டியிடும் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications