நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்ற பைனான்சியரும் பிடிபட்டான்
ஒசூர்:
ஒசூரில் லாட்ஜில் தங்கியிருந்த விந்தியாவை சினிமா பைனான்சியர் ஒருவர் கற்பழிக்க முயன்றார். முதலில் அவரைத் தப்ப விட்டபோலீசார் பின்னர் அவரைக் கைது செய்தனர்.
கன்னிநிலா படத்தின் சூட்டிங்குக்காக சென்னையில் இருந்து ஒசூருக்கு வந்தார் விந்தியா. அங்குள்ள சிவரஞ்சனி லாட்ஜில் தனதுதந்தை யோகானந்தம், மேக்கப் மேன் ரமணாவுடன் தங்கினார். இந்த லாட்ஜுக்கு பக்கத்து ஹோட்டலில் படப்பிடிப்புக் குழுவினர்தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தனது அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் விந்தியாவின் அறையின் பின் பக்கக் கதவை கள்ளச் சாவி போட்டுத் திறந்து கொண்டு 4 பேர் உள்ளேநுழைந்தனர். இதில் பைனான்சியரான கமல்ராஜ் என்பவர் விந்தியாவின் மீது பாய்ந்தார். இதையடுத்து விந்தியா அலறிசத்தம்போடவே தந்தையும், மேக் அப் மேனும் விழித்தெழுந்தனர்.
இதையடுத்து அந்த நபர்களுக்கும் விந்தியாவின் தந்தை, மேக் அப் மேனுக்கும் இடையே அடிதடி நடந்தது. இதையடுத்துகமல்ராஜும் கும்பலும் தப்பியோடிவிட்டது.
பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டும் கூட அந்த லாட்ஜின் நிர்வாகத்தினர் விந்தியாவின் உதவிக்கு வரவில்லை. இதனால் இரவோடுஇரவாக அந்த லாட்ஜில் இருந்து வெளியேறிய விந்தியா, படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த பக்கத்து ஹோட்டலில் போய்அழுதவாறே விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீசாரைத் தொடர்பு கொண்டனர். ஆனால், போலீசார் இந்த விஷயத்தைக்கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்தைத் தொடர்பு கொண்டு விந்தியா பேசினார். அவர் உடனடியாககாவல்துறை டிஜிபியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல, நேற்று காலை தான் ஒசூர் போலீசார் இந்த வழக்கையே பதிவுசெய்தனர்.
இரவில் தப்பியோடிய இருவரும் ஹோட்டலுக்கு வெளியே காரையும் செல்போனையும் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அவற்றைவைத்து விசாரித்தபோது தான், வந்தது கமல்ராஜ் என்பது தெரியவந்தது. ஒசூரில் வட்டித் தொழிலோடு, சினிமாக்களுக்கும்பைனான்ஸ் செய்து வரும் கமல்ராஜ் பெரிய ரெளடியாவான்.
இதற்கிடையே போலீசாரிடம் கமல்ராஜின் கூட்டாளிகளான சம்பத், சுந்தர் ஆகியோர் மட்டுமே சிக்கினர். கமல்ராஜ்தலைமறைவாகிவிட்டான். அவனை போலீசாரே தப்ப விட்டுவிட்டனர்.
வட்டிக் கடை நடத்தும் அவனிடம் போலீசார் நிறையவே மாமூல் வாங்கித் தின்றுள்ளதால், அவனைப் பிடிக்க சங்கோஜப்பட்டுஅவனை தப்ப விட்டதாகத் தெரிகிறது.
ஆனால், உயர் மட்டத்தில் இருந்து பெரும் நெருக்குதல் வந்ததையடுத்து கமல்ராஜைநேற்றிரவில் தான் போலீசார் கைது செய்தனர்.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்











Click it and Unblock the Notifications