ரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெண்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்து பரிதவித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் நஹாராஜ் பாத்திமா.18 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா, தனது குடும்பத்துக்கவலைகளை ரஜினியிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று நினைத்து சென்னை செல்ல முடிவு செய்தார்.
வீட்டில் கேட்டால் விட மாட்டார்கள் என்பதால், யாருக்கும் தெரியாமல், பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பேருந்து வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்தில்இறங்கிய பாத்திமாவுக்கு எப்படி ரஜினி வீட்டுக்குச் செல்வது என்று தெரியவில்லை.
அப்போது ஆட்டோ டிரைவர் பிரபாகர், பாத்திமாவை அணுகி யார் நீ, எங்கிருந்து வந்துள்ளாய் என்றுகேட்டுள்ளார். அவரிடம், ரஜினி வீட்டுக்குப் போக வேண்டும் என்று பாத்திமா கூறவே, பிரபாகரன் பாத்திமாவைரஜினி வீட்டுக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். ஆனால் ரஜினியைப் பார்க்க பாத்திமாவுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியுற்ற பாத்திமா என்ன செய்வது என்று புரியாமல் அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்துப்பரிதாபப்பட்ட பிரபாகர், பாத்திமாவிடம் ஆறுதல் கூறி அவரை மதுரவாயல் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றுநடந்ததைக் கூறினார்.
மதுரவாயல் காவல் நிலையத்தினர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து பெண்போலீஸாரிடம் பாத்திமாவை ஒப்படைத்தனர். பின்னர் தேவிப்பட்டணத்தில் உள்ள சுல்தான் தம்பதியினருக்குஇத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகிறார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications