திராவிட கொள்கைககளுக்காகவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ஜ.கவுடன் திமுக எந்தக் காலத்திலும் கூட்டு வைத்தது கிடையாது, அந்தக் கட்சியும் இடம் பெற்றிருந்த தேசியஜனநாயகக் கூட்டணியில் நாங்களும் இருந்தோம், அவ்வளவு தான் என கருணாநிதி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 15 வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு நிருபர்களிடம்கருணாநிதி கூறியதாவது:

பா.ஜ.கவுடன் நேரடியாக திமுக கூட்டணி வைத்ததே இல்லை. தே.ஜ.கூட்டணியில் அவர்களும் இருந்தார்கள்.நாங்களும் இருந்தோம். ஆனால், கூட்டணியை தவறாகப் பயன்படுத்தி திராவிடக் கொள்கைகளை முடக்கநினைத்தார்கள். திராவிட இயக்கம் பட்டுப்போகாமல் இருக்கவே அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இணைந்து நான் பிரச்சாரம் செய்யும் வகையில் இதுவரை திட்டம் ஏதும்தீட்டவில்லை. இருவருக்கும் நேரம் பொறுந்தி வரும்போது சேர்ந்தே பிரச்சாரம் செய்யலாம்.

பிரதம வேட்பாளரே இல்லாமல் காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. சொல்கிறது. இது போன்றபிரச்சாரமே அவர்களுக்கு எதிராக முடியப் போகிறது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு டிவி சேனல்களைபயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதனால் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.சேனல்களுக்குத் தான் (வருமானம்) அடி விழும்.

திருமாவளவன் ராஜினாமா செய்ததால் மங்களூர் சட்டமன்றத்துக்கு நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்

தேர்தலுக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் நிதானமாக, சிந்தித்து பணியாற்றுவோம். அதற்காக அசமந்தமாக இருக்கமாட்டோம் என்றார் கருணாநிதி.

பிரதமர் வாஜ்பாயை விமர்சிக்கும்போது மென்மையான அணுகுமுறையைக் கையாள்கிறீர்களே என்று நிருபர்கள்கேட்டதற்கு,

தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரர்கள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். முன்னால் போனால் கடிப்பார்கள்.பின்னால் வந்தால் உதைப்பார்கள். பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பினால் கருணாநிதி நாத்தீகம் பேசுகிறான்என்பார்கள். அதைப் பேசாமல் இருந்தால் திராவிட இயக்கம் நீர்த்துப் போய்விட்டது என்று எழுதுவார்கள்.மொத்தத்தில் அவர்களின் நோக்கம் என்னவென்றால் திமுகவை அழிப்பது தான். ஆனால், அந்த நோக்கம் எந்தக்காலத்திலும் நிறைவேறாது என்றார்.

புதிதாக கட்சியில் சேர்ந்த ராதிகா செல்விக்கு திருச்செந்தூர் தொகுதியை தந்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு,அவருடைய கணவர் (வெங்கடேச பண்ணையார்) திமுக இளைஞர் அணியில் இருந்தவர் என்றார்.

ரஜினியின் ஆதரவைப் பெற முயல்வீர்களா என்ற கேள்விக்கு, அவர் திமுகவை எதிர்க்கவில்லையே என்றுகருணாநிதி பதில் தந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+