சீட் கேட்டு சோனியாவை நச்சரிக்கும் ப.சிதம்பரம்
டெல்லி:
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரத்திற்கு, காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட சீட் கொடுக்க கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,தமிழக காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக முடிவெடுப்பதை ஒத்திப் போட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில்போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று இரவே இறுதிசெய்யப்பட்டு விட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியினர் நேர்காணல் நடத்தி இறுதி செய்த பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம்வாசன் வழங்கினார். இதையடுத்து தமிழக காங்கிரசின் அனைத்து முக்கிய கோஷ்டிகளுடனும் தீவிர ஆலோசனைநடத்திய குழுவின் தலைவர் பூட்டாசிங் ஒரு பட்டியல் தயாரித்து சோனியாவிடம் கொடுத்தார்.
அந்தப் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு வாசனுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி, சிவகங்கைதொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சோனியா இறுதி செய்துவிட்டார்.
சிவகங்கை தொகுதியை சிதம்பரம் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வருகிறார். தனக்கு சீட் தரப்படாவிட்டால்காங்கிரசுக்காகப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று ப.சிதம்பரம் தெளிவாகக் கூறிவிட்டார். தனக்கு மட்டுமின்றிதனது மகன் கார்த்திக்குக்கும் அவர் சீட் கேட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை, ப.சிதம்பரத்தை முன்னிருத்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட சோனியா காந்திவிரும்புகிறார்.ஆனால் சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு ஆதரவாக பல தரப்பினரும்சோனியாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் மீறி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க சோனியாவிரும்பவில்லை.
இருப்பினும், தமிழகத்தில் உள்ள மத்திய வர்க்க மக்களிடையே சிதம்பரத்திற்கு இருக்கும் நல்ல பெயரை சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார்.
இதனால் சிதம்பரம் விஷயத்தில் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட காங்கிரசின் முக்கியத் தலைகளைசமாதானப்படுத்தும் முயற்சிகளில் சோனியா தீவிரமாக இறங்கியுள்ளார்.
மார்ச் 5ம் தேதி தனது முடிவை சோனியா அறிவிப்பார் என்றும், அன்றே காங்கிரஸ் தமிழக வேட்பாளர்களின்பட்டியல் வெளியிடப்படலாம் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
