ப.சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க சோனியா ஆர்வம்
டெல்லி:
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரத்திற்கு, காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் சீட்கொடுக்க கட்சித்தலைவர் சோனியா காந்தி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில்போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று இரவு இறுதிசெய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை, ப.சிதம்பரத்தை முன்னிருத்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட சோனியா காந்திவிரும்புகிறார். மேலும் அவருக்கு சிவகங்கை தொகுதியைக் கொடுக்கவும் அவர் தீவிரமாக இருந்தார்.
ஆனால் சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,தற்போதைய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு ஆதரவாக பல தரப்பினரும் சோனியாவுக்குகடிதம் அனுப்பியதால், அதை மீறி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க சோனியா விரும்பவில்லை.
இருப்பினும், தமிழகத்தில் உள்ள மத்திய வர்க்க மக்களிடையே சிதம்பரத்திற்கு இருக்கும் நல்ல பெயரை சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். எனவே சிதம்பரத்திற்கு காங்கிரஸ் சார்பில் டிக்கெட்கொடுப்பது குறித்து அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 5ம் தேதி இது குறித்து முக்கிய முடிவைஅவர் அறிவிக்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications