மக்கள் வெள்ளத்தில் சிக்கிய வைகோ

Subscribe to Oneindia Tamil

கலிங்கப்பட்டி:

மதுரையில் இருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்றனர். திருமங்கலம், திருப்பரங்குன்றம்ஆகிய இடங்களில் கட்சியின் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சுமார் 6மணி நேரத் தாமதத்துக்குப் பின்னரே தனது சொந்த ஊரை அவரால் அடைய முடிந்தது.

மதுரையில் இருந்து வைகோவின் காரின் முன்னும் பின்னுமாக சுமார் 500 கார்களில் மதிமுக தொண்டர்கள்சென்றனர்.

பொடா சட்டத்தின்கீழ் 577 நாள் சிறைவாசத்திற்குப் பின் முதன்முறையாக பிறந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வந்தஅவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மாட்டு வண்டிகள்,லாரிகள், டிராக்டர்களில் கலிங்கப்பட்டிக்கு படை எடுத்தனர்.

இதில் சுமார் 20,000 பேருக்கு விருந்து சாப்பாடும் போட வைகோவின் வீட்டினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கரிசல் பூமியான அந்த சிறிய கிராமத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்திற்கென பிரத்யேக மைதானம்அமைக்கப்பட்டது. இதற்காக தங்களது நிலங்களை விவசாயிகள் மதிமுகவினரிடம் ஒப்படைத்தனர்.

வைகோவுடன் கைதாகி சிறையில் இருந்த கணேசமூர்த்தி, செவந்தியப்பன், பூமிநாதன், இளவரசன், அழகுசுந்தரம்,மணியன், நாகராஜன், கணேசன் ஆகியோரும் மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்தியஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மதிமுக பிரமுகர்கள் கலைப்புலி தாணு, சரவணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்(சிவகாசி தொகுதி வேட்பாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வைகோ பேச்சு:

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

பொடாவில் கைது செய்யப்பட்டு நான் சிறையில் இருந்தபோது ஏதாவது வன்முறை நடந்ததா? கல்வீச்சு உண்டா?பஸ்கள் எரிந்ததா? பொதுமக்களுக்கு ஏதாவது தொல்லை நேர்ந்ததா? நான் நினைத்திருந்தால் இவற்றைச்செய்திருக்க முடியும்.

என்னுடைய பேச்சினால் இளைஞர்களை வன்முறையாளராக மாற்றியிருக்க முடியும். ஆனால் நான் அமைதியைவிரும்பக் கூடியவன். நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன். கிராமங்களில் கோயில் திருவிழாவின்போது ஆடு,கோழி பலியிடப்படும். அது இந்த மக்களின் நம்பிக்கை. அதை தடுக்க யாருக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

திராவிட கொள்கைகளுக்கு விரோதமான எதையும் அனுமதிக்க முடியாது. கோயில்களில் தமிழ் ஒலிக்க வேண்டும்.

இந்த நாட்டில் விவசாயிகள் படும் வேதனை பற்றி முதல்வர் ஜெயலலிதா கவலைப்பட்டதுண்டா? இலவசமின்சாரத்தை ரத்து செய்த முதல்வருக்கு விவசாயிகள் கஷ்டம் தெரியுமா? இலவச வேஷ்டி சேலையை நிறுத்தியவர்,இப்போது தேர்தல் வந்ததும் மீண்டும் சேலை வழங்குகிறார்.

பிரதமர் வாஜ்பாய் என்னைப் பார்த்து, என் மகன் போன்றவர் என்றார். அவரை மதிக்கிறேன். இது போர்க்களம்.இங்கு தயவு தாட்சண்யம் கிடையாது. மதிப்புக் கொடுப்போம். ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

மதிமுகவை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை.ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். அதை இளைஞர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் இந்தமண்ணுக்கு வருவேன். நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. பதவி என்பது லெட்டர் பேடு,விசிட்டிங் கார்டு போன்றது என்றார்.

வைகோ பேச்சில் முக்கியமாக தனது இளமைக்கால வாழ்க்கையையும், கலிங்கப்பட்டி கிராம மக்கள் தம் மீதுகாட்டிவரும் அன்பையும், அதேபோல் தனக்கு அவர்கள் மேல் இருக்கும் காதலையும் எடுத்துக் கூறினார். பலநேரம் உணர்ச்சி மிகுந்து கண் கலங்கினார். அப்போதெல்லாம் கூட்டமும் கலங்கியது. வைகோவை வாழ்த்திகோஷமிட்டது.

கூட்டத்தில் பேசிய எல். கணேசன், குருஷேத்திரத்தில் கண்ணனுக்கு அர்ஜூனன் போல் திமுக தலைவர்கருணாநிதிக்கு வைகோ இருக்கிறார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+