மீண்டும் அத்வானி (தேர்தல்) ரத யாத்திரை: தமிழகத்தில் தொடங்குகிறார்
சென்னை:
கன்னியாகுமரியிலிருந்து ரத யாத்திரை தொடங்கி டெல்லி வரை சென்று தேர்தல் பிரசாரம் செய்ய துணைப் பிரதமர்அத்வானி முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் அவருடன் முதல்வர் ஜெயலலிதாவும் ரத யாத்திரையில்பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
ரத யாத்திரை செல்வதில் புகழ் பெற்றவர் அத்வானி. 1990ம் ஆண்டு அவர் சென்ற ரத யாத்திரை இந்தியாவில்இந்து, முஸ்லீம் சமுகத்தினருக்கிடையே நிலவி வந்த சகோதரத்துவத்துக்கு மரண அடி விழுந்தது. இருசமூகங்களையும் சேர்ந்த பல அப்பாவி உயிர்கள் பலியாயின. அந்த யாத்திரையின்போதுதான் அயோத்தியில்பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் ரத யாத்திரை மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளஅத்வானி திட்டமிட்டுள்ளார். இரண்டு கட்டமாக இந்த யாத்திரை நடக்கிறது. முதல்கட்டமாக மார்ச் 10ம் தேதிகன்னியாகுமரியில் அவரது ரத யாத்திரை தொடங்குகிறது. இதற்கு இந்தியா ஒளிர்கிறது யாத்திரை என்றுநாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களும் கர்நாடகத்தில் 3 நாட்களும் தொடரும் இந்த யாத்திரை, மார்ச் 16ம் தேதிஆந்திராவுக்குள் நுழையும். தமிழகத்தின் தர்மபுரி, சேலம் ஆகிய நகர்களில் அத்வானியின் ரத யாத்திரைவரும்போது முதல்வர் ஜெயலலிதாவும் அதில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர் மகாராஷ்டிரா, கோவா வழியாக 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் யாத்திரையை முடிக்கிறார்அத்வானி. இதையடுத்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
பின்னர் இரண்டாவது கட்டமாக குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ராமநவமியான மார்ச் 30ம் தேதி முதல்தனது யாத்திரையை அத்வானி தொடங்குகிறார். இந்த யாத்திரை ஏப்ரல் 14ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலம் பூரியில்முடிவடையும்.
கிட்டத்தட்ட 32 நாட்கள், 8,000 கி.மீ. தூரம் பயணம் செய்து, 121 மக்களவைத் தொகுதிகளில் இந்த ரத யாத்திரைமூலமே தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவுள்ளார் அத்வானி. இந்தத் தேர்தலில் குஜராத்தில் இருந்து போட்டியிடஅத்வானி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டுகளுக்கு முன் பிற்படுத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிரதமர் வி.பி. சிங்கின் அரசைராமஜென்மபூமி ரத யாத்திரை மூலம் கவிழ்த்தார் அத்வானி. பின்னர் சோம்நாத் ரத யாத்திரை நடத்தி கட்சியின்தலைமை பதவியில் இருந்த ஜோஷியை ஓரம் கட்சி தலைவரானார்.
இப்போது நடத்தப்படும் யாத்திரை பிரதமர் பதவியைக் குறி வைத்தா என்று நிருபர்கள் கேட்டபோது கடுப்பானஅத்வானி, நான் யாத்திரை நடத்தும்போதெல்லாம் அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்கிறீர்கள் என்று பதில் தந்தார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications