திருநாவுக்கரசரை விமர்சிப்பதா?: அதிமுகவுக்கு இல.கணேசன் கண்டனம்
சென்னை:
மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை அதிமுக தொடர்ந்து விமர்சித்துப் பேசுவது சரியல்ல என்று பா.ஜ.க. தேசியச்செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை தொகுதி கிடைக்காததுதொடர்பாக திருநாவுக்கரசர் தனது நிலையை விளக்கி, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடுவேன் என்றுஅறிவித்து விட்டார்.
ஆனாலும் அதிமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்த வண்ணம் உள்ளனர்.
இருப்பினும், என்னை விமர்சிப்பதால், எதிர்ப்பதால் அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்றுஅதிமுக நினைத்தால் அதை அவர்கள் தொடரட்டும் என்று திருநாவுக்கரசர் அறிக்கை மூலம் அடக்கமாக பதில்அளித்துள்ளார்.
கூட்டணி அமைத்த பின்னர், தோழமைக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரை கூட்டணிக் கட்சியின் தலைவர்கள்விமர்சிப்பது அழகல்ல, கூட்டணித் தர்மமும் அல்ல என்றார் இல.கணேசன்.
அதிமுகவுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு குறித்து இல.கணேசன் வெளிப்படையாகவே தனது அதிருப்தியைவெளியிட்டு வருகிறார். குறிப்பாக புதுக்கோட்டை, தென்காசி, தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய தென் சென்னைபோன்ற தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்படாதது குறித்து அவர் பகிரங்கமாகவே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதனால் பா.ஜ.கவில் கனேசன்-எச்.ராஜா-திருநாவுக்கரசர் ஆகியோர் ஒரு அணியாகவும் கட்சியின் மாநிலத்தலைவரான ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்னொரு அணியாகவும்செயல்பட்டு வருகின்றனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications