விடுதலை ஆனார் கஞ்சா புகழ் ஜனனி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

மதுரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கடந்தஆண்டு ஜூலை மாதம் கஞ்சா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவின் கணவர் நடராஜனின் நெருங்கிய தோழியான ஜனனிக்கும், தாயாருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன்வழங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று காலை ஜனனியும், ரமீஜாவும் திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையாகி வெளியே வந்த இருவரும் நிருபர்களிடம் எதுவும் பேசாமல், கால் ஏறி மதுரை புறப்பட்டுச்சென்றனர். இருவரும் விடுதலை ஆவதையொட்டி சிறை வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்றே ஜனனி விடுதலையாகி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை, ஜனனியின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் மதுரை போதைப் பொருள் தடுப்புநீதிமன்ற நீதிபதி சம்பத்குமாரிடம் கொடுத்தார். அத்தோடு ரூ. 50,000 மதிப்புள்ள இரு நபர் ஜாமீனையும்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதையடுத்து நீதிபதி சம்பத்குமார் ஜாமீன் உத்தரவை சங்கரபாண்டியனிடம் வழங்கவிருந்த நிலையில், அரசுவழக்கறிஞர் மோகன் எழுந்து, டெல்லி சிறைச் சாலைக்கு போலீஸ் வேடத்தில் சென்ற சிலர், பூலான்தேவியைக்கொன்றமுக்கியக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்தனர்.

எனவே, அதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, ஜாமீன் உத்தரவை தபால் மூலம்அனுப்புமாறு நீதிபதிக்குக் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட சங்கரபாண்டியன், செவ்வாய்க்கிழமைஅரசு விடுமுறை. எனவே தபால் மூலம் அனுப்பினால் ஜனனி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்படும் என்றுஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தபால் துறையுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்தார். அதன் பிறகுஸ்பீட் போஸ்ட்டில் ஜாமீன் உத்தரவை அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை திருச்சி சிறை அதிகாரிகளுக்கு நீதிபதியின் உத்தரவு ஸ்பீட் போஸ்டில் வந்து சேர்ந்தது.இதைத் தொடர்ந்து ஜனனியும், அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நடராஜனுடன் ஜனனி நெருங்கமாக இருந்ததால் கோபமடைந்த சசிகலா தரப்பினர் தான் போலீசார் மூலம் கஞ்சாகேஸ் ஜோடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஜனனியின் வீட்டில் சோதனை நடத்தியபோது நடராஜனால்அவருக்கு வாங்கித் தரப்பட்ட பெரும்பாலான நகைகள், கோடிக்கணக்கான ரொக்கமும் நம்பர் டூவிடம்போலீசாரால் ஒப்படைககப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நாடகம் நடக்கிறது என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+