பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: அன்புமணி போட்டியில்லை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 6 பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களின் பெயர்களும்அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை போட்டியிட்டவர்களில் மீண்டும் 2 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சராக இருந்து பதவி விலகிய என்.டி.சண்முகத்திற்கு இந்த முறை சீட்கொடுக்கப்படவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமதாசின் மகன் அன்புமணிக்கும் சீட் வழங்கப்படவில்லை.
மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சராக இருந்து தமிழகத்துக்கு ஏகப்பட்ட ரயில் திட்டங்களைக் கொண்டு வந்துமக்களிடம் நற்பெயர் பெற்ற ஏ.கே.மூர்த்திக்கு மீண்டும் சீட் தந்துவிட்டார் ராமதாஸ். அமைச்சராக இருந்தும்கட்சிக்கு நிதியுதவி செய்யாமல் தனக்கு மட்டுமே சொத்து சேர்த்துக் கொண்டதாக மூர்த்தி மீது கோபத்தில் இருந்தார்ராமதாஸ்.
இதனால் சீட் தரமாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், எப்படியோ செங்கல்பட்டு தொகுதியை வாங்கிவிட்டார்மூர்த்தி.
வேட்பாளர்கள் விவரம்:
1. ஏ.கே.மூர்த்தி- செங்கல்பட்டு
2. பொன்னுச்சாமி- சிதம்பரம் (தனி)
3. தன்ராஜ்- திண்டிவனம்
4. ஆர்.வேலு- அரக்கோணம்
5. ஆர்.செந்தில்- தர்மபுரி
6. பேராசிரியர் ராமதாஸ்- பாண்டிச்சேரி
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் பாமக சார்பில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களும் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியைசந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி அவர்கள் ஆசி பெற்றனர். உடன் வந்த பா.ஜ.க. தலைவர் ஜி.கே.மணிசெய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளின்தலைவர்களையும் விரைவில் சந்தித்து வேட்பாளர்கள் வாழ்த்துப் பெறுவார்கள்.
விழுப்புரம், தர்மபுரியில் பாமகவினர் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியடைந்து வன்முறையில் ஈடுபட்டதாக வரும்செய்திகளில் உண்மை இல்லை. அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாமகவினரே அல்ல. தோல்வி பயத்தில்அதிமுகவினரே வன்முறையில் ஈடுபட்டு பழியை பாமகவினர் மீது போடுகிறார்கள் என்றார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications