பா.ம.கவில் வெடித்தது உட்கட்சிப் பூசல்: வேட்பாளர் தேர்வில் அதிருப்தி- ஆங்காங்கே வன்முறை
விழுப்புரம் & தர்மபுரி:
மக்களவைத் தேர்தலுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக அக்கட்சியில் கடும் அதிருப்திஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பா.ம.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டிவனத்தில்...
திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின்உறவினர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திண்டிவனம் பகுதி பா.ம.கவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.கட்சி அலுவலகத்தைத் தொண்டர்களே சூறையாடினர்.
இந் நிலையில், திண்டிவனம் தொகுதி வேட்பாளராக ராமதாஸின் உறவினர் கோ.தன்ராஜ் என்பவர்அறிவிக்கப்பட்டுள்ளார். இது அப்பகுதி பா.ம.கவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்ராஜின் பெயரை ராமதாஸ் சென்னையில் அறிவித்த சிலமணி நேரங்களில் திண்டிவனம் பா.ம.க.அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் விரைந்து வந்தனர். கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரின் கட்-அவுட்களை அடித்து நொறுக்கினர். பேனர்களையும்கிழித்து எறிந்தனர்.
மேலும் இருவரது கொடும்பாவிகளையும் அவர்கள் எரித்தனர். உடனடியாக தன்ராஜை வாபஸ் பெறாவிடடால்பா.ம.கவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றப் போவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். போலீஸார் வந்து அவர்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
திண்டிவனம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தன்ராஜ், ராமதாஸின் நெருங்கிய உறவினர். மத்தியஅமைச்சராக ஏ.கே.மூர்த்தி இருந்தபோது, அவரை வேவு பார்க்க அவரது உதவியாளராக தன்ராஜைநியமித்திருந்தார் ராமதாஸ்.
விழுப்புரத்தில்...
அதே போல விழுப்புரம் மத்திய நகர மாவட்ட பா.ம.க. செயலாளர் பசுபதியின் ஆதரவாளர்களும் தன்ராஜூக்குஎதிராக போராட்டம் நடத்தினர்.
பசுபதியின் ஆதரவாளர்கள் விழுப்புரம் பா.ம.க. அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த ராமதாஸின் படத்தையும்,அன்புமணியின் படத்தையும் எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு உடைத்தனர்.
காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பா.ம.க. விளம்பர போர்டுகளையும், பேனர்களையும் தீவைத்துக்கொளுத்தினர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உறுப்பினர் கார்டுகளையும் தீயில் எறித்தனர்.அதோடு குடும்ப அரசியல் நடத்தும் ராமதாஸ் ஒழிக என்று கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்ததோடு, வன்முறையில் ஈடுபட்டவர்களையும்விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது, பசுபதி ராமதாசுடன் சென்னையில் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில்...
இந் நிலையில், தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் செந்திலுக்குச் சொந்தமான தர்மபுரியிலுள்ளமருத்துவமனை அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டது.
செந்திலின் மனைவி டாக்டர் தங்கம் செந்தில் மருத்துவமனையில் இருந்தபோது, 20 பேர் கொண்ட கும்பல்மருத்துவமனைக்குள் நுழைந்து சூறையாடியது. இதற்கும் உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பல இடங்களிலும் பா.ம.கவுக்காக வரையப்பட்ட தேர்தல் விளம்பரங்களையும் அந்தக் கட்சியினரே அழித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications