பா.ஜ.கவில் இணைந்தார் வாழப்பாடியின் மகன்: தர்மபுரியில் போட்டியிடுகிறார்
டெல்லி:
மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் பா.ஜ.கவில் இணைந்தார். அவரைதர்மபுரியில் பா.ஜ.க. நிறுத்தும் என்று தெரிகிறது.
வன்னிய சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. தமிழகத்தில் காங்கிரஸ்கட்சிக்கு மீண்டும் உயிரூட்டியவர். ராஜிவ் மரணத்தையடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிதேடித் தந்தார்.
ஆனால், பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது நல்லுறவு கசந்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவுடனும்மோதி, தமிழக ராஜிவ் காங்கிரஸை உருவாக்கினார். திமுகவுடன் கூட்டணி, அதிமுகவுடன் கூட்டணி என மாறி,மாறித் தாவிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.
இந் நிலையில் சேலம், தர்மபுரி பகுதிகளில் வாழப்பாடியின் பெயருக்கு இன்னும் கூட செல்வாக்கு இருப்பதால்,அவரது மகன் சுகந்தனை காங்கிரசுக்குள் இழுக்க ஜி.கே. வாசன் தீவிரமாக முயன்று வந்தாலும் சுகந்தன் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே பா.ஜ.க. தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக சுகந்தன் அந்தக் கட்சியில்இணைந்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் சுகந்தன், காங்கிரஸ்முன்னாள் எம்.பி. கலியபெருமாள் ஆகியோர் அக் கட்சியில் இணைந்தனர்.
இவர்களுடன் வாழப்பாடியின் சிஷ்யர்களாக இருந்த சென்னை பூங்காநகர் சேகர் உள்ளிட்ட 18 பிரமுகர்களும்பா.ஜ.கவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெங்கைய்யா நாயுடு, விரைவில் வேலூரில் பா.ஜ.க. மாநாடுநடைபெறவுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.கவில்இணையவுள்ளனர் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications