அமைச்சர்களின் பொறுப்பில் தொகுதிகள்: தோற்றால் பதவி காலி!
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் முதல்வர் ஜெயலலிதா இன்றுசந்தித்துப் பேசுகிறார்.
கடந்த மாதம் 24ம் தேதி தனது பிறந்த நாளின்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதாஅறிவித்தார். இந் நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
மாலையில் ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்து இல்லத்தில் வேட்பாளர்களைச் சந்திக்கிறார். அப்போதுதேர்தல் செலவுக்கான முதல்கட்ட நிதியை அவர் அளிப்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாகவே போயஸ் கார்டனுக்கு அமைச்சர்களை அழைத்து தேர்தல் வேலைகள் குறித்துமுதல்வர் பேசி வருகிறார். ஒரு தொகுதிக்கு ஒரு அமைச்சர் வீதம் 25 அமைச்சர்களுக்கும் தொகுதிகளைப் பிரித்துக்கொடுத்துள்ளார். பன்னீர்செல்வம், பொன்னையன் போன்ற சீனியர்கள் வசம் இரு தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
அந்தந்த அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கை வைத்து தொகுதிகளுக்குத் தேவையான செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கு உரிய நிதி கிடைக்கச் செயவதை உறுதி செய்யும் பொறுப்பு கட்சியின்பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் அந்தஅமைச்சரின் பதவி பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெ. பிரச்சாரம் தொடங்குமிடம் மாற்றம்
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் இடத்தை மாற்றியுள்ளார்.
மாற்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டம் நேற்று முன்தினம்அறிவிக்கப்பட்டது. வரும் 9ம் தேதி முதல் மே மாதம் 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில்ஈடுபடுகிறார்.
இந் நிலையில், ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. முன்னர் அறிவித்திருந்ததேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு சந்திப்புக்குப் பதில், மெரீனா கடற்கரைச் சாலை, டாக்டர் பெசன்ட் சாலைசந்திப்பில் (ஐஸ் ஹவுஸ் ரோடு) இருந்து தனது பிரச்சாரத்தை ஜெயலலிதா தொடங்கவுள்ளார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications