அத்வானி மேற்கொள்வது ரத யாத்திரை அல்ல.. பஸ் பயணம் தான்: பா.ஜ.க.
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி மேற்கொள்ள இருப்பது ரத யாத்திரை அல்ல, நவீன வசதிகள் கொண்ட பஸ் பயணம்தான் என பா.ஜ.க. அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், துணைப் பிரதமர் அத்வானி 10ம் தேதிகன்னியாகுமரியில் பிரச்சார யாத்திரையை தொடங்குகிறார். அன்று நாகர்கோவில் செல்லும் அவர் பா.ஜ.க.வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்காக பிரசாரம் செய்கிறார்.
அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசும் அத்வானி, பின்னர் கேரளா செல்கிறார்.
மீண்டும் 11ம் தேதி இரவு கேரளாவில் இருந்து அத்வானி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் பொதுக்கூட்டத்தில் பேசும் அவர் மறுநாளான 12ம் தேதி கோவை, நீலகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் பயணம் செய்துபா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வார்.
பின்னர் ஓசூர் வழியாக அவர் பெங்களூர் செல்வார். அதிமுகவுடன் கூட்டுப் பிரசாரம் செய்வது குறித்தும் இதுவரைஎந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த யாத்தரை மூலம் கலவரம் ஏற்படும், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்என்று எதிர்க் கட்சிகள் மிரட்டுகின்றன. இதன்மூலம் சிறுபான்மையினரை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றன.
தர்மபுரியில் அத்வானி பிரச்சாரம் செய்யச் செல்வதற்குள் பா.ஜ.க. வேட்பாளரை அறிவிக்கும்படி தலைமையிடம்கேட்டுள்ளோம் என்றார்.
வாஜ்பாய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதற்குஇல.கணேசனும் கண்டனம் தெரிவித்துதார். உலகமே வாஜ்பாயின் செல்வாக்கைப் புகழ்ந்து கொண்டுள்ளநிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு சிலரின் நற்சான்றிதழ் அவருக்குத் தேவையில்லை என்றார் இல.கணேசன்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications